ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

நிர்வாண கோலத்தில் தலைகீழாக குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்....!

ஹவாய்: நிர்வாண கோலத்தில் யோகா செய்தபடி தனது குழந்தைக்குப் பால் கொடுத்த பெண், பிரசுரித்த புகைப்படத்தால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
ஆடைகளின்றி வசிக்கும் சுதந்திரத்துடன் கூடிய தீவில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.

அந்தப் பெண் இந்தப் புகைப்படத்தால் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாகி விட்டார்.

அவரது பெயர் அமி உட்ரப். இவர் ஹவாய் தீவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ஹவாய் தீவில் ஆடைகளின்றியும் சுதந்திரமாக வசிக்கலாம். அமி ஒரு யோகாசனப் பிரியை ஆவார். யோகாசனம் செய்யாமல் அவரது எந்த நாளும் தொடங்காது, முடியாது.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது தோட்டத்தில் நிர்வாண நிலையில் யோகாசனம் செய்தார். உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நின்ற நிலையில் தனது பெண் குழந்தை நையாவுக்கும் பாலூட்டினார். இதை அவரது கணவர் புகைப்படம் எடுத்தார்.

இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் முக்கியம். அதேசமயம், எனது குழந்தைக்குப் பாலூட்டுவதும் முக்கியம். நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன். இதில் தவறேதும் இல்லை என்றார்.

மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலும் நையா இப்படித்தான் பால் குடிக்கிறாள். நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி.

ஆனால் அமியின் செயலுக்கு எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பலர் இது தாய்மையை இழிவுபடுத்துவது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அமி பொருட்படுத்தவில்லையாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல