Former rebel leader and chairman of the Communist Party of Nepal Maoist Pushpa Kamal Dahal, known as Prachanda
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நே பாள கமியூனிஸ்ட் கட்சி மிக நெருக்கமான தொடர்புகளை பேணி வந்து உள்ளது என இக்கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹால் வெளிப்படுத்தி உள்ளார்.இவர் பிரசந்தா என்றும் அழைக்கப்படுபவர். 2008 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் பிரதமர் ஆனவர்.
கட்சியின் உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்கும் நிகழ்வு ஒன்றிலேயே கடந்த வெள்ளிக்கிழமை காத்மண்டுவில் இதை தெரிவித்து உள்ளார்.
புலிகளிடம் இருந்து மாவோ தீவிரவாதிகள் உதவிகள் கோரினர் என்றும் புலிகளும் மாவோ தீவிரவாதிகளிடம் இருந்து உதவிகள் கேட்டனர் என்றும்கூட சொன்னார்.
புலிகளுடன் இவரது கட்சிக்கு தொடர்பு இருந்தது என பகிரங்கமாக இவர் தெரிவித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும்.
புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமையை இதில் நியாயப்படுத்த முயன்று உள்ளார்.
ஆயினும் புலிகளிடம் என்ன உதவி கோரினார்கள்? புலிகள் என்ன உதவி கோரினார்கள்? என்பதை இவர் வெளிப்படுத்தவில்லை.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக