செவ்வாய், 10 செப்டம்பர், 2013

ஆண்மை பெருக,அதிகரிக்க...

ஆண்மை பெருக

மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும்.

பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும்.சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.

தொண்டை, மார்பகங்கள் நுரையீரல்,குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

தினமும் ஒரு தக்காளி சூப் போதும் ஆண்மையை அதிகரிக்க அற்புத மருந்து.

ஆண்மையை அதிகரிக்கும் சக்தி தக்காளியில் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பிரிட்டன் போர்ட்ஸ்மவுத் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தக்காளி குறித்து ஓர் ஆய்வு நடத்தினர். தக்காளி, ஆண்மையை அதிகரிப்பதாக அதில் தகவல் வெளியாகியுள்ளது. தினமும் ஒரு தக்காளி சூப் குடித்தால் போதும்.

ஆண்களுக்கு வீரியத் தன்மை அதிகரிக்கிறது. விந்துவில் உயிரணுக்கள் குறைபாடே குழந்தை இன்மைக்கு காரணம். இதை தடுக்க சிறந்த மருந்து தக்காளிதான். தினமும் தக்காளி சூப் சாப்பிட்டால், இந்த குறைபாடு நீங்கிவிடும். தக்காளியில் உள்ள "லைகோபின்' தான் சிவப்பு நிறத்தை தருகிறது. இந்த சிவப்பில்தான் வீரியம் நிறைந்திருக்கிறது.

கொய்யா, பப்பாளியிலும் லைகோபின் உள்ளது. இரண்டு வாரம் தொடர்ந்து தக்காளி சூப் குடித்தால், ஆண்களின் வீரிய சக்தியில் லைகோபினின் அளவு 7ல் இருந்து 12 சதவீதமாக அதிகரிகிறது. குழந்தையின்மை குறைபாட்டை போக்க தக்காளியும் உதவும். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல