திங்கள், 16 செப்டம்பர், 2013

தமிழ் இணையங்களில் புலிகளின் கொடி நீக்கம்

பிரிட்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமிழ் இணையத்தளங்களில் புலிகள் இயக்கக் கொடி காண்பிக் கப்படுவதை தடை செய்துள்ளது. மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.

உலகெங்கிலும் எல்.ரி.ரி.ஈ. இந்த புலிகள் கொடியை தனது சின்னமாக வைத்திருக் கின்றது. பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முக மாகவே புலிகள் கொடியுடனான இந்த இணையத்தளம் அமைக்கப்பட்டிருந்தது.

லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயமும் இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர்களும் இதற்கு ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்தே லண் டனின் மெட்ரோ பொலிட்டன் பொலி ஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலும் புலிகள் கொடியை அகற்றுவது என்று முடிவெடுத்தன.

இந்த தீர்மானத்தை அடுத்து இரு இணையத்தளங்களில் இருந்து புலிகள் கொடி உடனடியாக அகற்றப்பட்டது. உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான கொடியை விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல