வெள்ளி, 25 அக்டோபர், 2013

60 வயது பௌத்த பிக்குவால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மாணவனுக்கு 75 ரூபா நஷ்ட ஈடு

பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் ஒன்று தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட 60 வயதான பௌத்த பிக்கு ஒருவருக்கு இருவருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அநுராதபுரத்தில் பாடசாலை மாணவர் ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கெப்பிதிகொல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட வடமத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன குறித்த பௌத்த பிக்குவை குற்றவாளியாகக் கண்டு பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்த கடூழியச் சிறைத் தண்டனையை விதித்தார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 75 ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குமாறும் உத்தரவிட்டார். இந்த பௌத்த பிக்கு தனது குற்றத்தை ஒப்பக் கொண்ட நிலையிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல