சனி, 12 அக்டோபர், 2013

அனந்தியின் சேலையை பார்த்து முதலமைச்சர் விக்கி ஆத்திரம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரனின் நேற்றைய பதவிப் பிரமாணம் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனை பெரிதும் கோபப்பட வைத்து உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் 09 பேர் பதவியேற்பு விழாவை பகிஷ்கரித்து இருந்தனர். ஆனால் அனந்தி சசிதரன் கடைசி நேரத்தில் வந்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டு கிளம்பிப் போய் விட்டார்.


பிந்தி வந்தார் என்பதற்கு அப்பால் அனந்தி வந்திருந்த கோலம்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பயங்கர சினத்தை உருவாக்கியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் பெண்கள் அணிகின்ற சேலையை இவர் அணிந்து வந்திருந்தார் என்பதே விக்னேஸ்வரனை சூடாக்கியது.

இச்சேலை புலிப் பெண்களின் சீருடை போன்றதுதான். மட்டும் அன்றி அரச எதிர்ப்பு பொங்கு தமிழ் வைபவங்களில் இச்சேலையை அணிந்து கொண்டுதான் புலி ஆதரவுப் பெண்கள் தோன்றி இருக்கின்றனர்.

இதை விட அனந்தி வராமலே விட்டிருக்கலாம் .... என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக நெருக்கமான ஒருவருக்கு தெரிவித்து இருக்கின்றார். மட்டும் அல்லாமல் வரும் நாட்களில் அனந்தியை இது குறித்து எச்சரிப்பார் என்றும் கண்டிப்பாக கூறி இருக்கின்றார்.

இவ்விடயம் வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறியின் காது வரைக்கும் சென்று இருக்கின்றது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் பெண்களின் சேலையைகூட உன்னிப்பாக நோட்டம் போடுகின்றார் என்று நையாண்டி செய்திருக்கின்றார் ஆளுனர்.

தாய்நாடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல