தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன், சென்னையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்களை சந்தித்து, இலங்கை பிரச்னை பற்றி உரையாடியிருக்கிறார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக அடிபடுகிறது.
அதற்கு காரணம், அடுத்த 6 மாதங்களின்பின் இந்தியாவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. அதிகூடிய ஆசனங்களை பெறும் தனிக் கட்சியாக இருக்கலாம் என கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் கே.பி. எனப்படும் செல்வராசா பத்மநாதனை, விறுவிறுப்பு.காம் இணையத்துக்காக இலங்கை, கிளிநொச்சியில் பேட்டி கண்டோம்.
ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேட்டியை எழுத்து மூலம் வெளியிடுவதற்காக சில வாக்கிய அமைப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பேட்டி: ரிஷி.
விறுவிறுப்பு.காம்: இரா.சம்பந்தன் சென்னையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர்களை சந்தித்தது, இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்க போகும் கட்சி என்ற ஊகத்தின் அடிப்படையில் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
கே.பி.: அப்படித்தான் இருக்கும் என்றுதான் நானும் நினைக்கிறேன். இரா.சம்பந்தன் இலங்கையில் அரசியல் செய்தாலும், அவர் பல ஆண்டுகளாக வசிப்பது என்னவோ, சென்னையில்தான். இதனால் கடந்த காலத்திலும் அவரால் அங்குள்ள பா.ஜ.க.வினரை சந்தித்திருக்க முடியும். ஆனால், அப்படி செய்ததில்லை.
இப்போது திடீரென நேரில் போய் அவர்களை சந்தித்து, அதன்பின் செய்தியாளர் சந்திப்பையும் நடத்தியிருக்கிறார். இந்தியாவில் அடுத்து ஆட்சியமைக்கப் போகும் கட்சி என்ற ஊகத்தின் அடிப்படையில் அவர் சந்தித்து இருக்கலாம் என்றே நான் கருதுகிறேன். அதே நேரத்தில் இவரது சந்திப்பு, இலங்கை தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் சொல்ல விரும்புகிறேன்.
விறுவிறுப்பு.காம்: தற்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர்களை சந்திப்பதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் தவறு செய்கிறார் என்று கருதுகிறீர்களா?
கே.பி.: நிச்சயமாக..
விறுவிறுப்பு.காம்: சரி. அந்த கேள்வியை வேறு விதமாக கேட்கிறேன். ஒருவேளை இம்முறை பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி நடந்தாலும், தற்போது சம்பந்தன் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர்களை சந்தித்தது, சாதகமாக அல்லவா முடிய வேண்டும்? உங்கள் கூற்றுப்படி பாதகமான விளைவுகள் எப்படி ஏற்படும்?
கே.பி.: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. டில்லியில் கொள்கை வகுப்பாளர்கள் என்ற அமைப்பு உள்ளது. புதுடில்லியில் North Block மற்றும் South Block கொள்கை வகுப்பாளர்களால் ஆராயப்பட்டு தீர்மானிக்கப்படும் கொள்கையே, வெளியுறவுக் கொள்கையாகிறது.
இதில் ஒரு பிரிவு அதிகாரிகள் கையாளுவது, உள்நாட்டு அரசியல் அழுத்தங்களை. மற்றைய பிரிவு அதிகாரிகள் கவனிப்பது, தேசிய நலனை. இந்த இரண்டையும் ஆராய்ந்து வெளியுறவு கொள்கை உருவாக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் மாறினாலும், அடிப்படைக் கொள்கைகள் சடுதியாக மாறுவதில்லை. இந்த அடிப்படை விஷயம்கூட சம்பந்தன் ஐயாவுக்கு புரியவில்லை என்பது, திகைக்க வைக்கிறது.
தற்போது இந்தியாவில் மத்தியில் காங்கிரஸ் அரசு உள்ளது. அடுத்து பா.ஜ.க. ஆட்சி அமையும் என்ற ஊகத்தில் சம்பந்தர், இந்திய கொள்கை வகுப்பாளர்களை இடைவெட்டி செல்லப் பார்க்கிறார். இதை அவர்கள் நிச்சயம் குறித்து வைத்துக் கொள்வார்கள். நாளை ஒருவேளை பா.ஜ.க. அரசு அமைந்தாலும், இந்த கொள்கை வகுப்பாளர்கள்தான் அப்போதும் இருப்பார்கள்.
பொதுவாக ராஜதந்திர அரசியலில் அனுபவம் வாய்ந்த யாருமே, மற்றொரு நாட்டின் குறிப்பிட்ட சில கோடுகளை தாண்ட மாட்டார்கள். அது அபாயகரமானது. இப்போது சம்பந்தர் ஐயா தாண்டியிருப்பது, அப்படியொரு கோடுதான்.
விறுவிறுப்பு.காம்: இலங்கையின் இனப்பிரச்னை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.ஜ.க.வை சந்திக்கவே கூடாது என்பதா உங்கள் கருத்து?
கே.பி.: இல்லை. இது தவறான நேரம். இன்றைய நிலையில், பா.ஜ.க. தலைவர்கள் இலங்கை வந்தால் தாராளமாக சந்திக்கலாம். அல்லது, இன்னும் 6 மாதங்களில் ஒருவேளை பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சியைப் பிடித்தால், தாராளமாக சந்திக்கலாம். அந்த தேர்தலில் பா.ஜ.க. தோற்றால்கூட சந்திக்கலாம். மற்றொரு ஆட்சி நடக்கும்போது, இந்தக் கட்சி ஜெயிக்கும் என்ற ஊகத்தில் சந்திப்பதுதான் அபாயம்.
விறுவிறுப்பு.காம்: சம்பந்தனின் சென்னை சந்திப்பை, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
கே.பி.: முதலில், தங்களை இடைவெட்டிச் செல்வதை புரிந்து கொள்வார்கள். அடுத்து, என்ன செய்வார்கள் தெரியுமா? ஒருவேளை பா.ஜ.க. ஆட்சி அமைந்தால், பா.ஜ.க. தலைமையிடம், “நேற்று காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, அடுத்த ஆட்சி உங்களுடையது என்ற ஊகத்தில் உங்களை சந்தித்தார்கள். நாளை உங்கள் (பா.ஜ.க.) ஆட்சி கவிழும் என்று ஒரு ஊகம் அடிபட்டால், இவர்கள் காங்கிரஸை சந்திக்க ஓடுவார்கள். இந்த ஆட்களுடன் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என கூறிவிடுவார்கள்.
சம்மந்தர் ஐயா, சென்னையில் தடியைக் கொடுத்து, டில்லியில் அடிவாங்க தயாராகிறார், அவ்வளவுதான்.
விறுவிறுப்பு.காம்: சம்பந்தர் சென்னையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என்பது இலங்கை தமிழ் மக்களின் விருப்பம். எமது கட்சியின் நிலைப்பாடும் அதுதான்” என்று கூறியுள்ளாரே!
கே.பி.: இது, சம்பந்தர் ஐயாவின் ராஜதந்திர அறிவுக்கு வைக்க வேண்டிய மற்றொரு மகுடம்! இந்தியா கலந்து கொள்வதா என்பதை முடிவு செய்யப்போகும் ஆட்கள், டில்லி கொள்கை வகுப்பாளர்கள். அவர்களது முடிவில், வெளிநாட்டவரான இவர் தலையீடு செய்ய பார்க்கிறார்.
‘இந்தியா கலந்து கொள்ளக்கூடாது’ என்று இந்திய அரசியல் கட்சிகள், அமைப்புகள் தாராளமாக கூறலாம். அது உள்நாட்டு அரசியல் அழுத்தம் என்ற பிரிவில் வரும். இவரது கூற்று, வெளிநாட்டு தலையீடு என்ற விதத்தில் பார்க்கப்படும். அந்தக் கூற்றே, இந்திய அரசிடம் இருந்து இவர்களை ஒதுக்கி வைத்துவிடும்.
தற்போதுள்ள காங்கிரஸ் அரசு இவர்களை ஒதுக்கி வைத்த காரணத்தால்தானே, அவர்கள் அவசரப்பட்டு பா.ஜ.க.வை சந்திக்கப் போனார்கள். அப்படிப் போகும்போதுகூட, அத்வானி, மோடி போன்ற தேசியத் தலைவர்களை சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் உள்ள மாநிலத் தலைவர்களை சந்தித்துவிட்டு பேட்டி கொடுக்கிறார்கள்.
விறுவிறுப்பு.காம்: சம்பந்தர் சென்னையில் பா.ஜ.க. மாநிலத் தலைவர்களை சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, “எமது கட்சி சார்பில் போட்டியிட்டு ஜெயித்து வடக்கு மாகாணத்தில் முதல்வர் ஆகியுள்ள விக்கினேஸ்வரனையும் அழைத்து வந்து இந்திய தலைவர்களை சந்திப்பேன்” என்று கூறியிருக்கிறாரே…
கே.பி.: இதுதான் அவருடைய உச்சக்கட்ட தமாஷ். இவர் குறிப்பிடும் முதல்வர் விக்கினேஸ்வரன், “காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்கிறார். இவரோ, “இந்தியா கலந்துகொள்ளகூடாது என்பது இலங்கை தமிழ் மக்களின் விருப்பம். எமது கட்சியின் நிலைப்பாடும் அதுதான்” என்கிறார்.
இலங்கை தமிழ் மக்களால் அமோக வெற்றிபெற வைக்கப்பட்ட விக்கினேஸ்வரனின் கருத்து அவருக்கு வாக்களித்த தமிழ் மக்களின் கருத்து இல்லையா? விக்கினேஸ்வரனின் கருத்து, அவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்து இல்லையா? சம்மந்தனுக்கு தெரிந்த இலங்கை தமிழர்களின் கருத்து, விக்கினேஸ்வரனுக்கு வாக்களித்த இலங்கைத் தமிழர்களின் கருத்து இல்லையா?
விக்கினேஸ்வரனையும் அழைத்துக்கொண்டு இந்தியாவுக்கு வரப் போவதாக இவர் கூறுவதை, மிகப் பெரிய நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்களா, இல்லையா? ராஜதந்திர விஷயமெல்லாம் சம்பந்தர் ஐயாவுக்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை போலிருக்கிறது.
விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக