ஞாயிறு, 20 அக்டோபர், 2013

பேஸ் புக் மூலம் அதிகரித்து வரும் ‘தாய்ப பால்’ விற்பனை!

மருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்புக் கொடைகள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம்.மேலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக் வலைத்தளங்களும் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்நிலையில் தற்போது அமெரிக்கா மற்றும பிரிட்டனில் சிறுநீரகம், நீண்ட தலைமுடி (உரோமம்), தாய்ப்பால், கருமுட்டை ஆகியவை விற்பனை அமோகமாக நடக்கிறது. பேஸ்புக் போன்ற இணையதளம் மூலம்தான் ஏராளமானோர் இவற்றை விலை பேசுகிறார்கள். பலரும் தங்கள் பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொட்ர்கின்றனர். அதிலும் கரு முட்டை விற்க ஆயிரக்கணக்கான பெண்கள் கருத்தரிப்பு சிகிச்சை மையங்களில் காத்துக் கிடக்கிறார்கள்.இந்த வகையில் நீண்ட கூந்தல் சுமார் ரூ.60 ஆயிரத்திற்கும், ஒரு அவுன்ஸ் தாய்ப்பால் ரூ.300 என்று விலை போகிறது.தாய்பால் ஒரு அவுன்ஸ் (30 மி.லி.,) 80 ரூபாய் முதல், 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

காலம் காலமாக ‘பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அவசியம்’ என டாக்டர்கள் கூறுவதால் இதன் அவசியத்தை இளம் தாய்மார்கள் தற்போது அதிகமாக உணர்ந்துள்ளனர். ஆனால் பலருக்கு போதிய பால் சுரக்காத காரணத்தால் பவுடர் பாலை கலந்து குழந்தைக்கு புகட்டுகின்றனர்.இதற்கிடையில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள பெண்கள் அதிகப்படியாக சுரக்கும் பாலை, “பேஸ் புக்’ போன்ற சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்து விற்கின்றனர். தாய்ப்பால் பற்றக்குறையாக உள்ள பெண்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெறுகின்றனர்.இந்த நடைமுறைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால் தாய்ப்பால் சேகரிப்பு மையங்கள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சில நாடுகளில் இது போன்று பேஸ்புக் மூலம தாய்ப்பால் விற்க கடும் எதிர்ப்பு வந்த நிலையில் அது போன்ற ஸ்பெஷல் பக்கங்களை பீஸ் புக் முடக்கி விட்டது. ஆனாலும் பலரும் தங்கள் பேக் ஐ டி மூல்ம் இந்த வியாபாரத்தைத் தொட்ர்கின்றனர்.

அதே சமயம் ‘முன்பின் தெரியாத பெண்கள் மூலம் பெறப்படும் தாய்ப்பால் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’ என ஜெர்மன் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து டாக்டர்கள் “தாய்ப்பாலை விற்கும் பெண் எச்.ஐ.வி., போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வீரியமான மருந்துகளை உட்கொண்டிருக்கலாம். இது போன்ற பெண்களிடமிருந்து பெறப்படும் பால், குழந்தைக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாது ஆறு மாத குழந்தைக்கும் ஒரு வயது குழந்தைக்கும், தேவையான சத்து மாறுபடும். எனவே தாய்ப்பாலை மற்றவர்களிடமிருந்து பெறுவது ஆபத்தானது. தாய்ப்பால் சுரக்காத பெண்கள் பவுடர் பாலையே குழந்தைக்கு கொடுக்கலாம். இது சுகாதாரமானது. என்று தெரிவித்தனர்…

aanthaireporter



Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல