செவ்வாய், 5 நவம்பர், 2013

6 மாத குடும்பப் பஞ்சாயத்தை அரை மணி நேரத்தில் தீர்த்த நித்தியானந்தா

தந்தி டிவியில் சனிக்கிழமை இரவில் சுவாமி நித்தியானந்தா, நித்ய தர்மம் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். கோர்ட், கேஸ் என்று நித்தியானந்தாவுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன.. ஆனால் அதையெல்லாம் தாண்டி, இப்போது. பிற குடும்பங்களிடையே ஏற்படும் பிரச்சனைகளை கேட்டு தீர்வு' வழங்கி வருகின்றார்.

கணவன் மனைவி பிரச்சினை, பிள்ளைகளை ஒதுக்கும் பெற்றோர்கள் என பல பிரச்சினைகளை கேட்டு தீர்வு சொல்கிறார்.

தொலைக்காட்சிகளில் அருள்வாக்கு சொல்லிக்கொண்டிருந்த நித்தியானந்தா இப்போது தந்தி டிவியில் குடும்ப பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு சொல்கிறார்.

சமீபத்தில் கணவன் மனைவி பிரச்சினை பஞ்சாயத்திற்கு வந்தது. தன்னையும் குழந்தைகளையும் விட்டு தோழியோடு போய்விட்டார் தன் கணவர் என்று ஒரு பெண் புகாரோடு வந்தார்.

புகாருக்கு ஆளான பெண்ணும் நிகழ்ச்சியில் பேசினார். தான் வெறும் தோழி மட்டும்தான். பணம் கொடுத்து உதவி செய்யத்தான் வந்தேன் என்று கூறினார்.

தொலைக்காட்சியில் லட்சக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தே இருவரும் கண்ட வார்த்தைகளில் திட்டித் தீர்த்தனர்.

பெண்களின் சண்டையை பார்த்து கொஞ்சநேரம் அமைதி காத்த நித்தியானந்தா புகாரின் நாயகன் அந்த பெண்ணின் கணவரை கூப்பிட்டார். ஒருபக்கம் தோழி, ஒருபக்கம் மனைவி யார் பக்கம் உட்கார விரும்புகிறீர்கள்? யாருடன் வாழ விரும்புகிறீர்கள் என்று நித்தியானந்தா கேட்க சற்றும் தயங்காமல் தோழியின் அருகில் அமர்ந்தார் கணவர்.

என் உயிருக்கு உத்தரவாதமில்லை எனவேதான் தோழியுடன் வாழ விரும்புகிறேன் என்று கூறவே இருவரிடம் உத்தரவாதம் வாங்கித் தருகிறார் நித்தியானந்தா. உடனே தோழியை விட்டு மனைவியின் பக்கம் இடம் மாறிக் கொண்டார் அந்த ஆண்.

இருவரும் சந்தோசமாக வாழ்ந்தால் போதும் என்று கூறி தோழி ஒதுங்கிக் கொண்டார். ஒருவழியாக ஆறுமாதமாக இருந்த குடும்ப பஞ்சாயத்தை அரைமணி நேரத்தில் பேசி தீர்வு சொன்னார் நித்தியானந்தா.

அழகான தமிழ் உச்சரிப்பில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நித்யானந்தா. நிகழ்ச்சிக்கு வருபவர்கள் முதலில் ஆசிர்வாதம் வாங்குகின்றனர்.

நடிகை லட்சுமி தொடங்கிய இந்த பஞ்சாயத்து நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன், கேப்டன் டிவியில் குட்டி பத்மினி, வசந்த் டிவியில் நிர்மலா பெரியசாமி என பெரிய கூட்டமே ஏழைகளின் குடும்ப கதைகளை கேட்டு பணம் பண்ணுகிறார்கள். இதில் நித்யானந்தாவும் இணைந்துவிட்டார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல