ஞாயிறு, 10 நவம்பர், 2013

ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும். இத்தகைய குடலிறக்கம் தொப்புள், அடிவயிறு போன்ற இடங்களில் உள்ள தசைப்பகுதிகளில் ஏற்படக்கூடியது. மேலும் இந்த பிரச்சனை சிறுவர் முதல் பெரியவர் வரை என யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த ஹெர்னியா என்னும் குடலியக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

மேலும் குடலிறக்கம் வந்தால், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலியையும் சந்திக்க நேரிடும். சில நேரங்களில் இந்த புடைப்பால் குடலானது நகர முடியாமல் மாட்டிக் கொண்டு, குடல் அடைப்பு அல்லது குடலானது அழுகிப் போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த ஹெர்னியா என்னும் குடலிறக்கத்தில் நிறைய வகைகள் உள்ளன.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இத்தகைய ஹெர்னியா இருந்தால், உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும்.
இப்போது அந்த குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போம்.
  • குடலிறக்கத்திற்கு அதிமதுரம் ஒரு சிறந்த நிவாரணி. அதற்கு ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் போட்டு கலந்து, வாரத்திற்கு ஒரு முறை குடிக்க வேண்டும். இதனால் அது பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
  • இஞ்சி கூட குடலிறக்கத்தை சரிசெய்யப் பயன்படும். அதிலும் குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்த, ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. இல்லாவிட்டதது அது வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
  • வெதுவெதுப்பான டீயை, அதிலும் சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இல்லாவிட்டால் ப்ளாக் டீ குடித்தாலும், ஹெர்னியாவை பிரச்சனையை சரிசெய்யலாம்.
  • ஹெர்னியா இருந்தால், ஒரு நாளைக்கு மூன்று முமுறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம். இது டீ பிடிக்காதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக விளங்கும்.
  • ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.
  • பழங்களில் அவகேடோ மற்றும் அன்னாசி போன்றவற்றை குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் போது சாப்பிட வேண்டும். இதனால் அவை புடைப்பு குறைப்பதோடு, வலியையும் சரிசெய்யும்.
  • பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். இதனால் அவை தசைகளை வலிமையடையச் செய்து, குடலிறக்கத்தால் உள்ளுறுப்புகள் பாதிக்காதவாறு பாதுகாக்கும்.
  • ஹெர்னியா இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
  • டீயிலேயே க்ரீன் டீ தான் ஹெர்னியாவை குணப்படுத்துவதில் சிறந்தது. ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
  • குடலிறக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.


Thatstamil
 
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல