திங்கள், 25 நவம்பர், 2013

வேர்ட் டிப்ஸ் :டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட

டேப் அளவைத் துல்லியமாக அமைத்திட: வேர்ட் புரோகிராமில் தரப்பட்டிருக்கும் டேப் நிறுத்தங்கள், வேகமாகவும், துல்லியமாகவும் தகவல்களை வரி ஒன்றில் அமைக்க உதவுகின்றன. நீங்கள் டைப்ரைட்டர் பயன்படுத்தி இருந்தால், இந்த டேப் ஸ்டாப் எந்த அளவிற்கு பயனுள்ளவை என்று உணர்ந்திருப்பீர்கள். இப்ப எங்க சார்! டைப்ரைட்டரை எல்லாம் பயன்படுத்துறாங்க! என்று கேட்காதீர்கள். இன்னும் சில அலுவலகங்களில் டைப்ரைட்டர் மற்றும் அதற்கான டைப்பிஸ்ட் என உள்ளனர்.

டேப் நிறுத்தங்களை நாம் விரும்பும் வகையில் துல்லியமாக அமைக்க முடியும். இரு வழிகளில் இதனை நாம் அமைக்க முடியும். ஒரு வழி ரூலரைப் பயன்படுத்தி அமைப்பது. இன்னொரு வழி டேப்ஸ் ஆப்ஷன் டூலைப் பயன்படுத்துவது. இதனை இங்கு பார்க்கலாம். கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.

1. எந்த பத்தியில், இந்த டேப் நிறுத்தங்களை அமைக்க வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு நிறுத்தவும்.

2. ரிப்பனில் ஹோம் டேப் தேர்வு செய்திடவும்.

3. பாரா குரூப்பில் வலது கீழாக உள்ள சிறிய ஐகானில் கிளிக் செய்திடவும். வேர்ட் பாராகிராப் டயலாக் பாக்ஸைக் காட்டும்.

4. இதில் கீழாக உள்ள Tabs என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இனி, டேப்ஸ் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

5. அடுத்து, கீழாகக் காட்டப்படும் Tab Stop Positionல், நீங்கள் அட்ஜஸ்ட் செய்திட விரும்பும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

6. அடுத்து Alignment வகையை, தேவைப்பட்டால் மாற்றவும்.

7. அடுத்து Set என்பதில் கிளிக் செய்திடவும்.

8. அடுத்து Tab Stop Position பாக்ஸில், நீங்கள் அமைக்க விரும்பும் அளவினை, அல்லது புதிய டேப் நிலையைக் குறிக்கவும். அடுத்து மீண்டும் எண் 6 மற்றும் 7ல் உள்ள செயல்பாட்டினை மேற்கொள்ளவும்.

அடுத்து டேப்ஸ் டயலாக் பாக்ஸினை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

டேபிளில் செல்கள் இடையே: வேர்ட் டாகுமெண்ட்டில் உள்ள டேபிள் ஒன்றில் முதல் செல்லுக்கும் டேபிளின் இறுதி செல்லுக்கும் செல்ல வேர்ட் ஒரு ஷார்ட் கட் கீ தந்துள்ளது. டேபிளுக்குள் கர்சரை அமைத்துக் கொண்டு ஆல்ட் + ஹோம் கீகளை அழுத்தினால் அந்த வரிசையில் முதல் செல்லுக்கு கர்சர் செல்லும். முதல் செல்லில் உள்ள சொல்லின் முதல் கேரக்டருக்கு முன் கர்சர் நிற்கும். அதே போல் கடைசி செல்லின் சொல்லுக்கு முன்னால் கர்சர் செல்ல ஆல்ட் + என்ட் கீகளை அழுத்த வேண்டும் .

வேர்டில் உள்ள டேபிளில் பல செல்கள் இருந்தால் அதில் எடிட் செய்கையில் அல்லது டேட்டா இடுகையில் ஒவ்வொரு செல்லுக்கும் இடையே தாவ வேண்டிதிருக்கும். பொதுவாக கர்சரை ஆரோ கீகள் மூலம் ஒவ்வொன்றாகத் தாவச் செய்வோம். இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. ஆல்ட் கீயை டவுண் ஆரோ கீயுடன் அழுத்தினால் கர்சர் அடுத்த செல்லின் மேலாகச் செல்லும். ஆல்ட் + அப் ஆரோ கீ அழுத்தினால் முந்தைய செல்லின் மேல் இடத்திற்குச் செல்லும்.

இதில் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் டாகுமெண்ட் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால் தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். மேலும் திரையில் தெரியும் செல்களுக்குள்ளாகத்தான் இந்த தாவல் நடைபெறும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல