விடுதலைப்புலிகள் கார்த்திகை பூக்களை தேசிய மலர்களாக அறிவித்ததால் மாவீரர் நாளில் அம்மலரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் வன்னியில் உள்ள சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவு கிளிநொச்சி வடமராட்சி கிழக்கு உட்பட வன்னிப்பிரதேசங்களிலேயே கார்த்திகை பூக்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்களில் மழைக்காலம் ஆரம்பித்ததும் மரங்களிலும் வேலிகளிலும் படரும் கார்த்திகை மரத்தில் பூக்கும் கார்த்திகை பூக்களை விடுதலைப்புலிகள் தமிழீழ தேசிய மலர்களாக அறிவித்தனர்.
அதன் பின்னர் கார்த்திகை மலர்களை கண்டால் சிங்கள படையினருக்கு விடுதலைப்புலிகளை கண்டது போல சிம்ம சொர்பனமாக இருக்கும். தற்போது மாவீரர்நாள் ஆரம்பமாகியிருப்பதால் வன்னி மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் கார்த்திகை கொடிகளை தேடி அழிக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டு வேலிகளில் படர்ந்திருக்கும் கார்த்திகை கொடிகளையும் அழித்து விடுமாறு இராணுவத்தினர் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக