செவ்வாய், 1 அக்டோபர், 2013

உலகின் குள்ளமான நபராக 16 அங்குல உயரமான வயோதிபர்

கின்னஸ் உலக சாதனை புத்­த­கத்தில் தனது பெயரை பதிவு செய்வதற்கு முயற்சி

உலகின் மிகவும் குள்­ள­மான நபர் தானே என நேபா­ளத்தைச் சேர்ந்த வயோ­திபர் ஒருவர் உரிமை கோரி­யுள்ளார்.

தலை­நகர் காத்­மண்­டுவின் தென்­மேற்கே பெயி­ர­ஹவா என்ற பின்­தங்­கிய கிரா­மத்தைச் சேர்ந்த மாஸ்டர் நயு (73 வயது) என்ற மேற்­படி நபர், தன்னை உலகின் மிகவும் குள்­ள­மான நப­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் பதிவு செய்யும் முக­மாக காத்மண்ட் நக­ருக்கு திங்­கட்­கி­ழமை விஜயம் செய்­துள்ளார்.

மாட்டர் நயுவின் உயரம் 41 சென்ரி மீற்றர் (16 அங்­குலம்) ஆகும்.

தான் உலகின் மிகவும் குள்­ள­மான நப­ராக உள்­ள­தை­யிட்டு மிகவும் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக மாஸ்டர் நயு தெரி­வித்­துள்ளார்.

அவர் நகர முடி­யாது சக்­கர நாற்­கா­லியே தஞ்­ச­மென வாழ்ந்த போதும், செயற்­றி­றன்­மிக்க ஒரு­வ­ராக விளங்­கு­வ­தா­கவும் அவர் பய­ணங்­களை மேற்­கொண்டு பல தரப்­பட்­ட­வர்­க­ளையும் சந்­தித்து பேசு­வதில் ஆர்வம் காட்டி வரு­வ­தா­கவும் அவ­ரது மரு­ம­க­ளான சீமா ஷெயிக் தெரி­வித்தார்.

அத்­துடன் மாஸ்டர் நயு ரிக் ஷோ வண்­டியில் சந்­தைக்கு செல்­வதை பெரிதும் விரும்­பு­வ­தாக சீமா கூறினார்.

தற்­போது உலகில் நடக்­கக்­கூ­டிய வல்­ல­மையைக் கொண்ட குள்­ள­மான மனி­த­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்பிடித்துள்ள சந்ரா பஹதூர் டான்சியும் (74 வயது) நேபாளத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்­போது உலகின் மிகவும் குள்­ள­மான நகர முடி­யாத நிலை­யி­லுள்ள நப­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்­பி­டித்­துள்ள தாய்­வானைச் சேர்ந்த நபரின் உயரம் 68 சென்ரி மீற்­ற­ராகும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல