வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ஆண்களை எளிதில் மடக்குவதற்கான சில சூப்பர் டிப்ஸ்...

"நாம பொண்ணுங்கள தேடி போக கூடாது, பொண்ணுங்க தான் நம்மள தேடி வரணும்" என்று நம்ம தலைவர் ஒரு படத்தில் சொல்வார். ஆனால் பெரும்பாலான பெண்கள் அப்படி நினைப்பதில்லை. பொதுவாக எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி, ஆண்களை தேடி சென்று அவர்கள் மீது பைத்தியமாக அலையும் உறவை அவர்கள் விரும்புவதில்லை. மாறாக ஆண்களை தங்கள் மீது பைத்தியமாக திரியவே விரும்புவார்கள்.



அவ்வாறு ஆண்களை உங்கள் பின்னால் சுற்ற வைப்பது ஒன்றும் அவ்வளவு சிரமம் கிடையாது. கொஞ்சம் நேரமும் பொறுமையும் இருந்தாலே போதும். மேலும் நீங்கள் செய்யும் காரியங்கள் அவர்களை ஈர்க்க வேண்டும். அதுவும் இயற்கையாக இருக்க வேண்டும். இங்கு ஆண்களை எளிதில் மடக்குவதற்கான சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் பார்க்கலாமா...

தனித்து நிற்கும் உங்கள் குணத்தை அவருக்கு காண்பியுங்கள்
சுதந்திரமாக யாரையும் சாராமல் இருக்கும் உங்கள் குணத்தை அவருக்கு காண்பியுங்கள். நீங்கள் எவ்வளவு தைரியமாக இருக்கிறீர்கள் என்பதை கட்டாயம் அவருக்கு தெரியப்படுத்த வேண்டும். இப்படி தனித்து செயல்படும் பெண்களிடம், ஆண்கள் வேகமாக ஈர்க்கப்படுவார்கள். எந்நேரமும் ஒரு ஆணிடம் அட்டை பூச்சி போல் ஒட்டிக் கொண்டு, அவரையே நம்பியிருந்தால் கண்டிப்பாக அவருக்கு உங்கள் மீது சலிப்பு தட்டி விடும்.

ஒட்டுண்ணியாக இருக்காதீர்கள்
தொடர்ந்து ஒரு ஆணிடம் ஒட்டிக் கொண்டு, அவரையே சுற்றி சுற்றி வந்தால், அவருக்கு உங்கள் உறவு கசந்துவிடும். எப்போது பார்த்தாலும், அவருக்கு பிடித்ததை செய்ய அவர் முன் போய் நிற்க தேவையில்லை. அதனால் அவர்கள் மூச்சு விட கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டியது ரொம்பவும் அவசியம்.

அவர் இடத்தை கை பற்ற எண்ணாதீர்கள்
ஆண்களுக்கு சமமானவர்களே பெண்கள்! ஆனால் ஆழமான உறவில் ஈடுபட்டிருக்கும் போது, அவர்கள் செய்யும் சில விஷயங்களை நீங்கள் செய்ய முடியாது. ஒரு ஆணின் ஆண்மைத்தனத்தை வெளிக்காட்ட விட்டீர்களானால், அவரே முன்னின்று உங்களுக்கு சில வழிகளில் உதவி புரிந்து துணையாக நிற்பார்.

வாழ்க்கையை கொண்டாட கற்றுக் கொள்ளுங்கள்
மனச்சோர்வான தோற்றத்துடன் எப்போதும் சோக மயமாக காட்சி அளிக்கிறீர்களா? கண்டிப்பாக எந்த ஆணும் உங்களால் ஈர்க்கப்பட மாட்டார்கள்.

தேவையான நேரத்தில் பக்கபலமாக இருங்கள்
ஆண்கள் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கும் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில், சில வகைகளில் ஆதரவு தேவைப்படும். அவருக்கு ஆதரவு தேவைப்படுவது உங்களுக்கு புரிந்தால், அவருக்கு பக்கபலமாக இருந்து தேவையான ஆதரவை தருவது உங்கள் கடமையாகும்.

எப்போதும் அழகாக இருங்கள்
பெண்கள் தங்களுக்கு திருமணம் ஆனவுடன் எளிமையாக மாறி விடுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களுக்கு தான் தன் துணை கிடைத்துவிட்டார் அல்லவா? ஆனால் அது தவறான எண்ணம். திருமணத்திற்கு முன் சிகை பராமரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தீர்களா? அப்படியானால் திருமணத்திற்கு பின்னும் அதனை தொடருங்கள்.

பொறாமை
சில பெண்கள் தன் கணவர் அல்லது காதலனை பொறாமை பட வைக்க, தங்கள் நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவழிப்பதுண்டு. இப்படி நீண்ட நேரம் நீங்கள் நண்பர்களுடன் செலவு செய்வது கண்டிப்பாக அவரை எரிச்சலடைய செய்யும். நீங்கள் இதை செய்யவில்லை என்றாலும் கூட, சில பெண்கள் செய்யத் தான் செய்கிறார்கள். மறுபடியும் நீங்கள் யார் என்பதை பொறுத்து, இது அமையும். உங்கள் துணைக்காக அவர் அதிகமாக ஏங்குபவராக இருந்தால், உங்கள் மீது அதிக பைத்தியமாக இருப்பார்.

காது கொடுத்து கேட்பவராக இருங்கள்
காதலன் சொல்வதை காது கொடுத்தல் கேட்பது, அவர் உங்களுக்கு கிடைக்க ஒரு வழியாகும். அவர் பேசும் போது, அதை காது கொடுத்து கேட்டால், அவர் மீது நாட்டம் கொண்டுள்ளீர்கள் என்று அவருக்கு தோன்றும். தங்கள் மீது ஒரு பெண் அக்கறை கொண்டிருக்கிறாள் என்றால் அது ஆண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் அவர்கள் மீது பைத்தியமாக திரிவார்கள். எப்போதும் உங்கள் லட்சியம் மற்றும் கனவுகளை பற்றியே பேசி, 'நான்' என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். அவரையும் பேச விடுங்கள். தங்கள் செயல்களுக்காக பாராட்டப்பட்டால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

உங்களை தனித்துவத்துடன் காட்டுங்கள்
அழகு மட்டும் போதும் என்றால் அது பல பெண்களிடம் கொட்டி கிடக்கிறது. அதையும் தாண்டி அவர்களிடம் இருந்து நீங்கள் தனியாக தெரிய ஏதாவது தனித்துவத்துடன் இருங்கள். அது என்ன என்பதை கண்டுபிடித்து, அதனை செய்ய ஆரம்பியுங்கள்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள்
கடைசியாக, நீங்கள் நீங்களாகவே இருங்கள். நீங்கள் தொலைக்காட்சி அல்லது சினிமாவில் பார்த்த சூப்பர் ஸ்டார் போல் எல்லாம் நடக்க தேவையில்லை. நீங்கள் நீங்களாகவே இருந்து, அவரின் மரியாதையை சம்பாதித்து கொள்ளுங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல