ரூ 5 லட்சம் வரை வருமான வரிவிலக்கு, தமிழீழத்துக்கு வாக்கெடுப்பு- அதிமுக தேர்தல் அறிக்கை !!
சென்னை: ரூ5 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வருமான வரிவிலக்கு, தனி ஈழத்துக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை என்பன உள்ளிட்ட 43 வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
சென்னை அண்ணா திமுக தலைமை கழகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சி பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் தமிழ் பிரதியை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். தேர்தல் அறிக்கையின் ஆங்கில பிரதியை அக்கட்சியின் மூத்த தலைவர் விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் தமிழகத்துக்கு மட்டுமின்றி இந்தியாவின் வளர்ச்சிக்கான திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் மொத்தம் 43 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முக்கியமான சில:
- சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக நடவடிக்கை மேற்கொள்வோம்.
- நதிகளை தேசியமயமாக்கி நதிநீர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
- வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
- மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து நிலைநாட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.
-- இலங்கையில் தனி ஈழத்துக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஐ.நா.சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம்.
- மகளிர் மேம்பாட்டுத் திட்டங்களை தேசிய அளவில் செயல்படுத்துவோம்.
- மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்.
- மகளிருக்காக 33% இடஒதுக்கீட்டு வழிவகை செய்யப்படும்.
- இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த நடவடிக்கை.
- ரூ5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு அளிக்க நடவடிக்கை.
- மத்தியில் ஊழல்லற்ற அரசு அமைய உத்தரவாதம் அளிப்போம்.
- மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பதிலாக அனைவருக்கும் பயன் அளிக்கக்கூடிய பொது விநியோகத் திட்டம் நடைமுறை
- தமிழ்நாட்டின் மாதத் தேவையான 65,140 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயை பெறத் தேவையான நடவடிக்கை
- மின் மிகை மாநிலங்களிலிருந்து மின் குறை மாநிலங்களுக்கு மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வகையில், புதிய மின் வழித்தடங்களை அமைக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள்
- தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு தேவையான டி.ஏ.எஸ். அனுமதியை பெற நடவடிக்கை
- காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தேவையான நடவடிக்கைககளை அதிமுக எடுக்கும்.
- மாநில நலன்களை உள்ளடக்கிய வெளியுறவுக் கொள்கை- கூட்டுறவு கூட்டாட்சி
- அனைத்து கடலோர மாவட்டங்களிலுள்ள நதி முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்படும்.
- எண்ணூர், கடலூர், பூம்புகார், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரத்தில் கடல் அரிப்பு பிரச்சனைக்கு தீர்வு காண நிதி
- மீனவர் நலனுக்கு தேசிய மீனவர் சேமிப்பு, நிவாரணத் திட்டம்
- அரசமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக்க வலியுறுத்துவோம்.
- தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை இலங்கை அரசை வலியுறுத்துவோம்
- இலங்கை- இந்திய மீனவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தையை நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க தேவையான நடவடிக்கை
- மாவட்டங்களிலுள்ள உள்ள மீன்பிடித் துறைமுகங்கள் நவீனமயமாக்கப்படும்.
- 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக