பாலுமகேந்திராவை காதலிக்க தொடங்கியது முள்ளும் மலரும் படத்தில்தான். நடிகர்கள் பெயர் திரையில் தோன்றியதும் கை தட்டி மகிழும் ரசிகர்கள் மத்தியில் டெக்னீசியன்களுக்கு கை தட்டி வரவேற்ப்போம்...
நானும் எனது நண்பர்களும்...
அந்தப்பழக்கத்தின் பிள்ளையார் சுழி... முள்ளும் மலரும்...
கை தட்டல் வாங்கியது பாலுமகேந்திராவும்,மகேந்திரனும்.
பாலுமகேந்திராவுக்கு ஏரிபிளக்ஸ் கேமிரா சற்று வாஞ்சையுடன் செயல்பட்டதோ என்ற சந்தேகம் இன்றும் தீரவில்லை.
பாலு மகேந்திராவின் முதல் படம் கோகிலாவில் கமல்தான் ஹீரோ...
அன்று தொடங்கிய வளர்பிறை பந்தம்....
மூன்றாம் பிறையில் இந்திய அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை சொந்தமாக்கியது கமலுக்கு....
பாலுமகேந்திரா பிழைக்கத்தெரியாத பிறவிக்கலைஞன்.
வெள்ளிவிழா படங்களை தந்தாலும்...வெள்ளிப்பணத்தை அள்ளுவதை பிரதானமாக்கியதில்லை.
லட்சங்களை மதிக்காமல் லட்சியத்துடன் படமெடுத்த போராளி.
இவரது காமிராவால் கவனிக்கப்படாத ஊட்டி லொகேசன்கள்.... சற்று நாணி தலை குனிந்து இருப்பதை பார்க்கலாம்.
அவர் படமெடுத்து தள்ளிய பைன் மரக்காடுகள் கர்வத்தோடு அலைவதை கண்டு களிக்கலாம்.
பல காரணங்களால் பணத்தட்டுப்பாடு வந்தது பாலுமகேந்திராவுக்கு....
கேட்கப்போன இடங்களில் எல்லாக்கதவுகளும் சாத்திக்கொண்டன...
மிகுந்த தயக்கத்துடன் கமலுக்கு போன் செய்து...
தனது நிலையை விளக்கி இரண்டு லட்சம் கடனாக கேட்டார்.
கமல் ஆபிசுக்கு வருமாறு அழைத்தார்.
தனது கம்பீரத்தை அடகு வைத்து... கடன் வாங்க...
காமிராக்கலைஞன்.... கமல் அலுவலகத்துக்கு வந்தார்.
கமல் எப்போதும் போல் அவரை வரவேற்று பேசினார்.
உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்து விஷயங்களையும் பேசியவர் கடன் மேட்டரை...மறந்து கூட பேசவில்லை.
சரி...கமலிடம் பைசா...பெயராது ...எனத்தீர்மானித்து...
போறேன்...கமல்... என புறப்பட்டார்.
ஸாரி..இருங்க....நான் உங்களை வரச்சொன்ன காரணத்தை சொல்லவேயில்லையே....
எனது கம்பெனி ராஜலக்ஷ்மி புரடக்ஷனில் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன்.
நீங்கள்தான் இயக்கிதர வேண்டும்.
இந்தாங்க... அதற்க்குறிய சம்பளம்...என இருபது லட்சம் எழுதப்பட்ட செக்கை கொடுத்தார்.
அந்தப்படம்தான் சதி லீலாவதி.
தனக்கு ஜோடியாக கோவை சரளாவை போடச்சொல்லி நிர்ப்பந்தித்ததும் கமலே...
ஒரு நகைச்சுவை நடிகையை ஜோடியாக்கும் ஆண்மை....
கமல் ஒருவருக்கு மட்டுமே இன்று வரை சாத்தியமாகி உள்ளது.
ஆனால் இன்று வரை பாலுமகேந்திரா கேட்ட கடனை கமல் கொடுக்கவேயில்லை.
உலகசினிமா ரசிகன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக