ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை கொல்ல முடியாமல் போனால், தில்லியில் அவரைக் கொலை செய்ய அனைத்து திட்டங்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் வகுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1991ஆம் ஆண்டு மே 21ம் தேதி ராஜீவ் கொலையில் மூளையாக இருந்த செயல்பட்ட சிவராசன் எழுதி வைத்திருந்த டைரியின் குறிப்புகளில் இருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வீட்டில் இருந்து ராஜீவ் கொலை செய்யப்பட்டதற்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றிய சிவராசனின் டைரியில், திட்டம் ஏ-வின்படி, ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் கொலை செய்யப்படவில்லை எனில், திட்டம் பி-யில், தில்லியில் மனித வெடிகுண்டு மூலமாக கொலை செய்ய, மற்றொரு மனித வெடிகுண்டு படையைச் சேர்ந்த பெண்ணை தயார் படுத்தி வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக