திங்கள், 17 மார்ச், 2014

மாயமான மலேசிய விமானத்தின் பைலட்களில் ஒருவர் தற்கொலை?

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.



விமானிகள் தற்கொலை செய்ய வேண்டி விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய சம்பவங்கள் முன்பு நடந்துள்ளன. ஆனால் விமானி தற்கொலை செய்யத் தான் விமானத்தை எங்காவது கொண்டு போய் விபத்துக்குள்ளாக்கினார் என்பதை விசாரணை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவித்தது இல்லை.

விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டபோதும் தற்கொலை தான் காரணம் என்பதை மட்டும் யாரும் வாய் திறந்து கூறவில்லை.

மலேசிய விமானம்
239 பேருடன் மாயமாகியுள்ள மலேசிய விமானத்தில் இருக்கும் இரண்டு விமானிகளில் ஒருவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அவர் தற்கொலை செய்ய விமானத்தை எங்காவது மோதியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

1999
1999ம் ஆண்டு எகிப்து ஏர் விமானம் 990 அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள நான்டுக்கெட் தீவுக்கு அருகே அட்லாண்டிக் கடலில் விழுந்தது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 217 பேரும் பலியாகினர். விமானத்தில் இணை விமானி கமீல் எல் படோட்டி ஆட்டோ பைலட்டை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, விமானத்தை கீழ் நோக்கி செலுத்தியுள்ளார். அப்போது அவர் நான் கடவுளை நம்புகிறேன் என்று மட்டும் 11 தடவை கூறியுள்ளார்.

தற்கொலை
விமானி கமீலின் செயலால் தான் விமானம் கடலில் விழுந்தது என்றாலும் அதற்கு காரணம் தற்கொலை என்ற வார்த்தையை மட்டும் யாரும் பயன்படுத்தவில்லை. எகிப்து அதிகாரிகளோ விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று தெரிவித்துவிட்டனர்.

1997
1997ம் ஆண்டில் இந்தோனேசியாவின் தலைநகரான ஜகர்தாவில் இருந்து 104 பேருடன் சிங்கப்பூருக்கு கிளம்பிய சில்க்ஏர் விமானம் 185 விபத்துக்குள்ளான காரணம் குறித்து முரண்பாடுகள் உள்ளன. போயிங் 737 ரக விமானமான அது வேண்டும் என்றே விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்று அமெரிக்கா நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இந்தோனேசிய அதிகாரிகள் நடத்திய விசாரணை முடிவே பெறவில்லை.

மொசாம்பிக்
மொசாம்பிக் ஏர்லைன் விமானம் ஒன்று தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடான அங்கோலா செல்லும் வழியில் வேண்டும் என்றே கீழ் நோக்கி வந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர். ஆனால் அது குறித்து இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்கா பெடரல்
விமான போக்குவரத்து நிர்வாகம் நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 2012ம் ஆண்டுடன் நிறைவடைந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 758 விமானங்கள் விபத்துக்குள்ளாகின. அதில் 8 விமானங்கள் மட்டுமே விமானிகள் தற்கொலை செய்ய விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

thatstamil

தொடர்புடைய பக்கங்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல