வடபகுதி சூழலை அவதானிக்கும் போது மீண்டும் இலங்கையில் ஓர் அசாதாரன சூழல் ஏற்பட்டுவிடுமோ என அச்சம் கொள்ளும் வகையில் எதிர்பாராத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. வடபகுதியிலிருந்து இராணுவத்தினரை அகற்றவேண்டும் என அடுத்தடுத்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கும் இவ்வேளை, புலிகளின் காலப்பகுதியில் பயன்படுத்திய சேதத்தை ஏற்படுத்தும் பல்வேறுவகையான ஆயுதங்கள் நிலத்திற்குக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.எனவே அவ்வகையான ஆயுதங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் கருவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்தன. இக்கருவிகள் புனர்வாழ்வு பெறாத முன்னாள் புலிகளியக்க உறுப்பினர்களினால் களவாடப்பட்டமை பதற்றத்தை தோற்று வித்துள்ளது.
அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்த கனரக பார ஊர்திகள், லொறிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் புலிகளினால் களவாடப்பட்டன. அத்துடன் இவ்வாறான இயந்திரங்களைக் கொண்டு நிலக்கீழ் அரண்கள் மற்றும் தேவையான பாதுகாப்பு அரண்களை எவ்வாறு எளிதாக அமைத்துக் கொள்ள முடியும் என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்.1986 ஆம் ஆண்டு எவ்வாறு சூடான் கிளர்ச்சியாளர்களுக்கு சட்டவிரோதமாக ஆயுதங்களும் துப்பாக்கி ரவைகளும் வழங்கப்பட்டனவோ அது போன்று புலிகளும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் வாகணங்களைப் பயன்படுத்தியமைக்கான சான்றுகள் உள்ளன. இதேவேளை சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு சொந்தமான பாரிய மின்பிறப்பாக்கி, நீர்ப்பம்பிகள், கூடாரங்கள், பௌசர்கள் மற்றும் ஏனைய பொருட்கள் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டன இவையும் புலிகளினால் களவாடப்பட்டனவா என இவ்விடத்தில் கேள்வி எழும்புகின்றன.
ஜெனீவாவில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக தேசிய சமாதானப் பேரவை மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்களை பரிசீலிப்பதற்காக பாராளுமண்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு தலைமைதாங்கிய விஜித ஹேரத் என்பவர் நெதர்லாந்தின் அகதிகள் பராமரிப்பு நிறுவனமான “சோவா” அமைப்புக்கு விடுதலைப் புலிகளுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு இருந்தமைக்கான போதியளவான ஆதாரம் தம்வசம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கமானது தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கம் என நன்கு தெரிந்தும் கூட கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி விடுதலைப் புலிகள் இயக்க உருப்பினர் ஒருவரின் இறப்புக்கு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டார். இவ்வாறான செயற்பாடுகள் குறித்து நாம் மேலும் என்ன கூறமுடியும்! இத்தகைய சூழ்நிலைகளின் பின்னணியில் சர்வதேச சமூகம் தந்திரமாக செயற்படுகின்றமை எமக்கு வியப்பாகவே உள்ளது. யுத்தம் உச்சகட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களினதும் வாகனங்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் திடீரென காணாமல் போன அனைத்தும் புலிகள் வசம் இருந்ததாக கண்டறியப்பட்டது.
தற்போது டாஷ் எனப்படும் ஓர் நிறுவனத்தின் அறிக்கைப் பிரகாரம் ஜனவரி 15 ஆம் திகதி 5 கண்ணிவெடியை கண்டறியும் இயந்திரங்கள் களவாடப்பட்டதாக அறிவித்திருந்தது. என்ன ஓர் ஆச்சரியம் அதில் ஒரு இயந்திரம் விசுவமடுவைச் சேர்ந்த ஆர்.மதனியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. எனினும் அவர் முன்நாள் புலி உருப்பினர் என ஊகிக்கமுடியாமல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மதனியின் தோட்டத்தில் பின்வரும் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருந்தன
கண்ணிவெடியை கண்டறியும் இயந்திரம் 01
60 மி.மீ மோட்டார் குண்டுகள் 05
81 மி.மீ மோட்டார் குண்டுகள் 02
ஆர்.பீ.ஜீ குண்டுகள் 02
தமிழன் கைகுண்டுகள் 03
7.62 x 39 ரவைகள் 378
இல.12 துப்பாக்கி ரவை 01
5 கி.கி கிளைமோர் 01
கண்ணிவெடிகளை கண்டறியும் 5 கருவிகளில் மேலே கூறப்பட்டது ஒன்று மற்றயது மார்ச் 13 ஆம் திகதி (தொடர் இலக்க எண்21838) உலகலாவிய ரீதியில் புகழ் பெற்ற பாலேந்திரன் ஜெயகுமாரியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகும்.
மீதமுள்ள மூன்றும் கோபியிடம் உள்ளது போன்று பெரியவையாகும். கோபி பொலிஸாரின் மிது துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டு தப்பியோடியவர். அவர் தற்போது இந்தியாவில் பாதுகாப்பாக இருக்கமுடியும்.
ஒரே தேசம் என்ற ரீதியில், அரசியல் பாகுபாட்டை தவிர்த்து மீண்டும் அச்சம் உள்ளதோர் யுகத்துக்கு கொண்டு செல்லும் எந்த நடவடிக்கைக்கும் துணை போகாது பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
மேலும் நாட்டின் ஸ்திரத்தன்மையை குழப்புவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து செயற்படும் சக்திகள் இனங்காணப்படுமிடத்து அது தொடர்பான தகவல்களை அரசுக்கு வழங்குதல் பொதுமக்களின் கடமையாகும். எனவே இவ்வாறு வழங்கப்படும் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வாராந்தம் வெளியிடப்படும் போது பொதுமக்கள் விழிப்புணர்வாக இருக்கும் வாய்ப்பு நிலவும் மிகுந்த அர்ப்பணிப்புடனும் போராட்டத்துக்கும் மத்தியிலும் கிடைக்கப்பெற்ற சமாதானத்தை இராணுவத்தினர்தான் தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டும் எனும் மன நிலைலையை தவிர்த்து நாட்டின் சமாதானத்துக்கு உதவுவோர், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகள் தெரிய வருமிடத்து அவ்வாறான தகவல்களை அரசுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உறுதுனையானவராகலாம்.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டணியினரால் புரியப்பட்ட துரோகங்கள் அல்லது காட்டிக் கொடுப்புக்களை அவர்கள் சற்று சீர் தூக்கிப்பார்க்க வேண்டும். புலிகளுடன் அவர்கள் வைத்திருந்த உறவுகளுக்காக அரசு நடவடிக்கை எடுக்காதவிடத்தும் அவர்களது குற்றங்களை மக்களின் கண்களிலிருந்து மறைக்க முடியாது என்பது யதார்த்தம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக