தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வேலை செய்தவரும், தெற்கின் பிரபல போதைப் பொருள் விநியோகஸ்தர்களில் ஒருவருமான குடு சமில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இவர் தாய்லாந்தில் இருந்து புறப்பட்டு வந்தபோது படுகொலை தொடர்பாக பிடிக்கப்பட்டு உள்ளார். கந்தர பிரதேசத்தில் இப்படுகொலை இடம்பெற்று உள்ளது.
பயங்கரமான போதைப் பொருள் மன்னன் என்று அறியப்படுகின்ற ரத்கம விதுரவின் பிரதம விநியோகஸ்தர் இவரே ஆவார். ரத்கம விதுர இத்தாலியில் இருந்து செயற்பட்டு வருகின்றார்.
குடு சமில் மாத்திரம் அன்றி ரத்கம விதுர, ரத்கம விதுரவின் நண்பர் ஐஸ் மஞ்சு ஆகியோரும் புலிகளுக்கு வேலை செய்து உள்ளனர். குறைந்தது இராணுவத்தின் சிரேஷ்ட ப்புலனாய்வு அதிகாரி ஒருவருடைய படுகொலையிலாவது இவர்களூக்கு தொடர்பு உள்ளது என்று பொலிஸார் கூறுகின்றனர்.
குடு சமிலின் சொத்துகளின் பெறுமதி பல மில்லியன்களுக்கு மேல் வரும். ஏராளம் ரோலர் படகுகளும் இவற்றில் அடங்கும். இப்படகுகளை போதைப் பொருள் கடத்தல்களுக்கு பயன்படுத்தி வந்திருக்கின்றார்.
இவர் சில காலத்துக்கு முன் தாய்லாந்துக்கு தப்பி சென்று இருந்தார். இவர் தற்போது தடுப்புக் காவலில் போடப்பட்டு விசாரிக்கப்படுகின்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக