புதன், 19 மார்ச், 2014

உளுத்தம் பருப்பு சட்னி

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்
வரமிளகாய் - 10
புளி - நெல்லிக்காய் அளவு
வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய், புளி, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு, நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து மென்மையாக அரைத்து, பின் அதில் வெல்லத்தைப் போட்டு அரைத்தால், சுவையான உளுந்து சட்னி ரெடி!!!

இந்த சட்னியானது தோசை, இட்லி மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல