புதன், 2 ஏப்ரல், 2014

மலேசிய விமான புலனாய்வு-2: மலேசிய அரசு திடீர் ‘பல்டி’ அடிப்பது ஏன் தெரியுமா?

மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து ரேடியோ மூலம் தரைக்கு வந்த (பதிவாகிய) இறுதி வாக்கியம், “All right, good night” என்பதில் இருந்து “Good night, Malaysian three-seven-zero” என்ற வாக்கியமாக மாறுவது, புலனாய்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை. ஆனால், மலேசிய அரசின் நம்பகத்தன்மை மீது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது.



“பதிவாகிய காக்பிட் உரையாடலையே மாற்றும் இவர்கள் (மலேசிய அரசு), அடுத்து எதை மாற்ற போகிறார்களோ” என்ற குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன.

நேற்றிரவு மலேசிய அரசு வெளியிட்ட தகவலில், “விமானம் தரையுடன் (டவருடன்) மேற்கொண்ட உரையாடலின் இறுதி வாக்கியம், “All right, good night” என்று கூறப்படவது தவறு, “Good night, Malaysian three-seven-zero” என்பதுதான், சரியான வாக்கியம்” என கூறப்பட்டது.

இந்த தகவல் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதில், அதனுடன் கூறப்பட்ட மற்றொரு சிறிய தகவலை பலர் கவனிக்கவில்லை.

அந்த தகவல் என்ன தெரியுமா? “விமானத்தின் காக்பிட்டில் இருந்து இந்த இறுதி வாக்கியத்தை கூறியவர் யார் என்பது தொடர்பாகவும் நாம் ஆராய்ந்து வருகிறோம்”

ஆஹா.. அப்படியானால், அந்த குரலுக்கு சொந்தக்காரர் விமானத்தின் கோ-பைலட் என்று உறுதி செய்யப்படவில்லை என்று இப்போது சொல்கிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில், “அந்த குரலுக்கு சொந்தக்காரர் விமானத்தின் கோ-பைலட் அல்ல” என்று சொல்ல போகிறார்களா?

இதில் மற்றொரு விஷயத்தை கவனியுங்கள். மாயமான மலேசிய விமானம் MH370 தரையுடன் மேற்கொண்ட 54 நிமிட ரேடியோ உரையாடலை முதலில் வெளியிட்டது, மலேசிய அரசு அல்ல, பிரிட்டிஷ் மீடியா ஒன்றுதான் என்பது நிஜம்தான். ஆனால், அந்த உரையாடல் பிரிட்டிஷ் மீடியாவால் வெளியிடப்படுவதற்கு முன், “விமானம் டவருடன் மேற்கொண்ட உரையாடலின் இறுதி வாக்கியம், “All right, good night” என்று கூறியது யார் என்பதை பாருங்கள்.

சாட்சாத் மலேசிய அரசுதான் கூறியிருந்தது!

இந்த தரவுகள் நிமிடத்துக்கு நிமிடம் மாறக்கூடியவை அல்ல. காக்பிட்டுக்கும், டவருக்கும் இடையிலான இந்த உரையாடல் ரிக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. அது எப்படி மாற முடியும்?

அதை விடுங்கள். “All right, good night” என்ற இறுதி வாக்கியத்தை கூறியவர், விமானத்தை செலுத்திச் சென்ற கோ-பைலட் ஃபாரிக் அப் ஹமீத் என்று கூறியது யார்?

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அஹ்மத் ஜவ்ஹாரி யாஹ்யா!

(இது தொடர்பாக மார்ச் 17-ம் தேதி விறுவிறுப்பு.காமில் நாம் ளெியிட்ட தகவலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்)

மலோசியன் ஏர்லைன்ஸ் சி.இ.ஓ. அப்போது உறுதி செய்த தகவலை, இப்போது, “அது யாருடைய குரல் என ஆராய்கிறோம்” என்கிறது மலேசிய அரசு.

காக்பிட் உரையாடலில் ரிக்கார்ட் செய்யப்பட்ட குரலை, யாருடைய குரல் என்று உறுதி செய்வதற்கு (voice biometrics processing) தொழில்நுட்பம் உள்ளது. பதிவு செய்யப்பட்ட குரலை, இன்னாருடைய குரல் என உறுதி செய்வதற்கு வருடக் கணக்கில் அவகாசம் எடுக்காது. அதிகபட்சட் 48 மணி நேரத்தில் உறுதி செய்து விடலாம்.

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ. அஹ்மத் ஜவ்ஹாரி யாஹ்யா அப்படி உறுதி செய்யாமல், “அது கோ-பைலட்டின் குரல்தான்” என செய்தியாளர் மாநாட்டில் உறுதி செய்திருக்க முடியாது.

இப்போது திடீரென எதற்காக அனைத்தும் மாறுகின்றன?

அநேகமாக இவர்கள் பெரிதாக எதையோ மாற்ற போகிறார்கள். அந்த மாற்றத்துக்காக சில சிறிய விஷயங்களை இப்போது அட்ஜெஸ்ட் செய்கிறார்கள்.

இதையெல்லாம், ‘யாரோ சொல்லிக் கொடுத்து’ மலேசிய அரசு செய்வது போலவே உள்ளது! முதலில் கூறப்பட்டது மலேசியாவின் ஒரிஜினல் கூற்றுகள். தற்போது மாறுவது, ‘எங்கிருந்தோ வரும் உத்தரவு’.

viruvirupu

புலனாய்வு-1:

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல