புதன், 21 மே, 2014

நல்லதொரு ஐடியா....இது யாருக்குத்தான் புரியும்?

மே 18 ஐ முன்னிட்டு, ஒரு முன்னேற்பாடாக யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தை அஞ்சு நாட்கள் மூடியிருக்கெல்லோ...

இது ஏனெண்டு ஆருக்காவது விளங்கியிருக்குமோ தெரியாது. ஆனால், நம் தமிழ் உலகம் இதை வைச்சு ஆயிரமாயிரம் பிரியாணியைப் போட்டு விட்டது.

இதைப்பற்றி பக்கம் பக்கமாகப் பேப்பர்க்காரர் வேறு எழுதிக் கிழித்து விட்டினம்.

இதை வைச்சு இணையத்தளங்கள் ஒரு தகவல் புரட்சியையே நடத்தி முடித்துள்ளன.

நம் தமிழ் அரசியல்வாதிகள் மட்டும் சும்மா இருப்பினமோ? அல்லது அவர்கள் என்ன எதிலும் சளைத்தவையோ?

அவையளும் தங்கட கடமைக்;கு இதைப்பற்றிக் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு, குற்றம் சுமத்தி, தங்கள் பணியை முடிச்சிருக்கினம்.

பல்கலைக்கழக மாணவர் அமைப்பும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் பெரிய போர்க்கொடியைத் தூக்கி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தித் தங்களைப் பற்றி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் தங்களைப் பற்றிப் பொறித்தும் கொண்டார்கள்.

ஆனால், இது ஏன் மூடப்பட்டது எண்டு ஒருத்தரும் சிந்திக்கவும் இல்லை. அதைப்பற்றிச் சம்மந்தப்பட்டவர்களுடன் கதைக்கவும் இல்லை.

2012 ஆம் ஆண்டு மாவீர்நாளுக்கு இந்த மாதிரித்தான் பேப்பர்காரரும் புலம்பெயர்ந்திருக்கிற எங்கட வெளிநாட்டுக்காரரும் கூட்டமைப்புக்காரரும் பப்பாவில ஏத்திவிட நாலைஞ்சு கம்பஸ் பெடியள் விளக்கேத்தினாங்கள் எல்லோ...!

இந்தப் பெடியளை விளக்கேத்திறதுக்கு உஷார்ப்படுத்திப்போட்டு, மற்றவையெல்லாம் மெல்லக் கழண்டிட்டம்.

இந்த நாலைஞ்சு பெடியள் பாவம். வீணாகச் சிக்கி, நாலைஞ்சு மாசம் சிறையிருந்து அலைஞ்சுலைஞ்சுதான் வெளியில வந்ததுகள். இந்தப் பெடியளின்ரை தாய் தேப்பன் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல.

அதோட பல்கலைக்கழகமும் அஞ்சு மாதம் மூடப்பட்டிருந்துது. இந்தப் பெடியளை விட்டால்தான் பல்கலைக்கழகத்தை நடத்த விடுவம் எண்டு மாணவர்கள் போராடினால் வேற என்ன செய்யிறது?

ஐஞ்சு மாசம் பல்கலைக்கழகம் மூடப்பட்டதால ஒரு வருசம் பிந்திப்போய்த்தான் பட்டமளிப்பே நடந்திது.

ஒரு வருசம் பட்டமளிப்புப் பிந்தினால், வேலையைத் தேடுறதுக்கும் ஒரு வருசம் பிந்தும். அப்பிடித்தான் பிந்தியுமிருக்கு.

ஆனால், பெடியளின்ரை வயசில அவங்கள் அப்பிடித்தான் சிந்திப்பாங்கள். அப்பிடித்தான் எதையும் பார்ப்பாங்கள். எதையும் உடன செய்யோணும். எந்தத் தடை வந்தாலும் அதையெல்லாம் உடைச்செறியோணும் எண்டு. அதுவும் பல்கலைக்கழகப்பெடியள் எண்டால் கொஞ்சம் கூடுதலாக உஷாராக - சுதந்திரமாகத்தானிருப்பாங்கள்.

இதில ஆரும் தப்போ தவறோ சொல்லேலாது.

ஆனால், படிச்சவை, சமூகத்தில பொறுப்பான இடங்களில இருக்கிறவை, புத்திஜீவிகள் எண்டிருக்கிறவை கொஞ்சம் நிதானமாக யோசிக்கோணும். அவைதான் சரியாக வழிகாட்ட வேணும்.

இவையெல்லாம் சரியாகச் சிந்திச்சால் பல காரியங்கள் சிறப்பாக நடக்கும். பல சிரமங்கள் நடக்காமலே போகும்.

ஒரு உதாரணம் -

இந்த முறை மே 18 ஐ ஒட்டி ஒரு கிழமைக்கு பல்கலைக்கழகம் மூடப்பட்டதெல்லோ...

இந்த முடிவைப்பற்றி ஆரும் விமர்சிக்கலாம். விமர்சிக்காமல் விடலாம்.

ஆனால், நாலு பேரின்ரை விசுக்கோத்து வேலைகளால நாலாயிரம் ஐயாயிரம் பெடியளின்ரை படிப்பும் எதிர்காலமும் வீணாகாமல் காப்பாற்றப்பட்டிருக்கு.

ஒரு ஆறு ஏழு நாளைக்கு பல்கலைக்கழகத்தை மூடினதால அஞ்சு ஆறு மாதத்தைப் பேணிப்பாதுகாத்திருக்குது பல்கலைக்கழக நிர்வாகம் எண்டுதான் சொல்லுவன்.

இதைத்தான் புத்திசாலித்தனமான முடிவு எண்டு சொல்லிறது.

ஒரு கிழமையை இழந்தாலும் அஞ்சு ஆறு மாதத்தைப் பாதுகாத்திருக்கிறதுக்காகப் பல்கலைக்கழக நிர்வாகத்தைப் பாராட்டோணும்.

ஆனால், எங்கட ஆட்கள் என்ன செய்யினம் தெரியுமா?

'விடடா கெடப்போகிறன். வேணுமெண்டால் வா, வந்து பந்தயம் கட்டு' எண்டெல்லோ இந்த மாதியான விசுக்கோத்து வேலைகளுக்கு முன்னுக்கு வந்து நிக்கினம்.

இப்ப பல்கலைக்கழகத்தை அப்பிடியே வைச்சிருந்தால், அங்க நாலுபேர் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தாங்கள் நினைச்ச மாதிரி நடக்க, அது பெரிய வில்லங்கமாகி, அடிதடி எண்டு வளர்ந்து கைது, சிறை வரை போயிருந்தால்....

பேப்பர்காரருக்குக் கொண்டாட்டம். அரசியல்வாதிகளுக்குத் திருவிழா. இணையப் புரட்சிப்படைக்குப் புரியாணி.

என்ன செய்யிறது, இதொண்டுக்கும் இடம் வைக்காமல், புத்திசாலித்தனமாக நடந்து எல்லாரையும் சப்பெண்டு ஆக்கி விட்டுது பல்கலைக்கழக நிர்வாகம்.

இதுக்காக இதோட - இந்த முடிவோட சம்மந்தப்பட்டவைக்கு நாங்கள் ஒரு சபாஷ் சொல்லத்தான் வேணும்.

மற்றவையைப் பார்த்து எங்கட பின்பக்கத்தையும் ஒருக்கால் காட்டலாம்.

இப்பிடி ஒவ்வொரு முடிவையும் அதோட சம்மந்தப்பட்டவை கொஞ்சம் புத்தியாக – நிதானமாக எடுத்தால் இந்த நாடு உருப்படும்.

நாடு உருப்பட வேணும் எண்டால் நாங்கள் உருப்படியாக நாலு காரியம் செய்யவேணும்.

-வடபுலத்தான்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல