வெள்ளி, 25 ஜூலை, 2014

பெண்ணுறுப்பை ஆரோக்கியமாக பராமரிக்க.. இதோ சில புதிய வழிமுறைகள்!

உங்களுடைய பெண்ணுறுப்பை எப்படி பராமரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதுவும் நீங்கள் பிறந்து சில பல வருடங்களுக்குப் பிறகு, மாதவிடாய் வருவதும், மகப்பேறு மருத்துவரை பார்ப்பதும், உடலுறவு கொள்வதும், குழந்தைகள் பெறுவதும் என பல்வேறு விஷயங்களை உங்களுடைய பெண்ணுறுப்பு எதிர்கொள்ளும் போது அதனைப் பராமரிப்பதற்கென பல்வேறு விதிமுறைகள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்வது நலம்.


அதிகம் தண்ணீரை விடாமல் இருத்தல், டாம்பன்களை அதிக நீளமாக வைக்காமலிருத்தல் மற்றும் மார்பக காம்புகளை தொடர்ந்து பரிசோதித்தல் போன்றவை தான் நீங்கள் தெரிந்து கொண்டுள்ள விதிகளாகும்.


ஆனால் நீங்கள் பெரியவராக வளர்ந்து வரும் நேரத்தில் - குறிப்பாக மாதவிடாய்க்கு முன் பருவம் மற்றும் மாதவிடாய் பருவங்கள் உங்களை நெருங்கும் போது - உங்களுடைய பெண்ணுறுப்பில் வரக் கூடிய சில பிரச்சனைகளை அல்லது அறிகுறிகளை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். உங்களுடைய செக்ஸ் வாழ்க்கையிலிருந்து புற்றுநோய் அபாயம் வரை ஆபத்தில்லாத பழக்கங்கள் இருந்தால், அவை பெரிய விளைவுகளை உங்களிடம் ஏற்படுத்தும்.

இந்த கட்டுரையில், 40 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய பெண் நோயாளிகளுக்கு உள்ள சில பொதுவான பெண்ணுறுப்பு சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளோம். மேலும், உங்களுடைய பெண்ணுறுப்பை முறையாகப் பராமரிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் கொடுத்துள்ளோம்.


தீவிரமான மாதவிடாய்


உங்களுக்கு வயதாக ஆக, மாதவிடாய் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று நண்பர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கலாம். ஆனால் இதனை முழுவதும் உண்மை என்று நம்ப வேண்டாம். எனவே, உங்களுடைய மாதவிடாய் தீவிரமாக இருந்தாலோ, அடிக்கடி மாதவிடாய் வந்தாலோ (இரண்டு வாரத்திற்கொருமுறை), அல்லது உடலுறவிற்குப் பின்னர் மாதவிடாய்க்கு இடைப்பட்ட காலத்தில் இரத்தப்போக்கு இருந்தாலோ உங்களுடைய மருத்துவரிடம் தகவல் தெரிவியுங்கள். அதிகமான இரத்தப்போக்கு வந்தால் அது கர்ப்பப்பை கட்டிகள் ஆகவும், இரத்த சோகை, பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் என்ற ஹார்மோன் பிரச்சனையாகவோ அல்லது மிகவும் அரிதாக வரக்கூடிய கருப்பை வாய் அல்லது கருப்பை புற்றுநோய் ஆகவும் கூட இருக்கலாம்.

தவறான தொற்றுகளுக்கு சிகிச்சையளித்தல்

எந்தவொரு பெண்ணும் அரிப்புகளோ அல்லது வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளோ வரும் போது, அதனை ஈஸ்ட் தொற்று என்று நினைத்துக் கொண்டு, அந்த இடத்தில் பூஞ்சையை எதிர்க்கும் கிரீம்களை தடவுவார்கள். ஆனால், அது மட்டுமே காரணமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதே சமயம் மிகவும் சாதாரணமான பிரச்சனையாக இருக்கும் ஈஸ்ட் தொற்றுக்களை, 75 சதவீத பெண்கள் தங்களுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது அனுபவிக்கிறார்கள் - அவர்களுக்கு பெண்ணுறுப்புகளில் வரும் பொதுவான தொற்று நோய்களில் ஒன்றாக இது உள்ளது. பெண்ணுறுப்பில் பாக்டீரியாக்கள் அதிகளவு வளர்ந்து விட்டதன் காரணமாக ஏற்படும் பாக்டீரியல் வெஜிநோசிஸ் (Bacterial Veginosis - BV) என்ற தொற்றுநோயும், டிரிக்கோமோனோசிஸ் (Trich) என்ற பாலுறவால் பரவக் கூடிய நோய்த்தொற்றும் தான் மற்ற இரண்டு நோய்களாகும். வேஜினோசிஸ் மற்றும் டிரிக் ஆகியவற்றின் அறிகுறிகளும் ஈஸ்ட் தொற்றுகளைப் போலவே இருக்குமாதலால், ஈஸ்ட் தொற்றுகளை சரியாக அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமானதாகும். இந்த பிரச்சனையை சரி செய்யாமல் விட்டு விட்டால், BV மற்றும் டிரிக் ஆகிய பாலுறவால் பரவும் நோய்களுக்குள்ளாக நேரிடும்.

முகத்திற்கு பூசும் பவுடரை போடுதல்


முகத்திற்கு பூசும் பவுடர்கள் அல்லது குழந்தைகளுக்கான பவுடர்களை போட்டுக் கொண்டு புத்துணர்வு பெற முயற்சி செய்வது பிரச்சனையில்லாத சுகாதார வழிமுறை என்று சொல்ல முடியாது. இந்த பழக்கம் ஓவரியன் புற்றுநோய் உங்களுக்கு வரும் அளவை 30 சதவீதத்திற்கு உயர்ந்திவிடும் என்று அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு (American Association for Cancer Research) 2011 ஆம் ஆண்டு நடத்திய வருடாந்திர கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவில் தெரியப்படுத்தப் பட்டுள்ளது. இந்த பவுடர்களை அடிக்கடி மற்றும் நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவதால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு அல்லது மூன்று மடங்குகளாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. அந்த இடத்தில் உங்களுக்கு வியர்வை வருவது தொடர்ந்தால், பருத்தியாலான கீழ் உள்ளாடைகளை போட்டுக் கொள்வதும், டைட்-பிட்டிங் பேண்ட் அணிவதை தவிர்ப்பதும் மற்றும் இரவு நேரங்களில் காற்று படும் வகையில் பெண்ணுறுப்பை வைப்பதும் நல்ல பலன் தரும்.

கெகல் உடற்பயிற்சிகள் (Kegel Exercise)


கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்குப் பிறகோ உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்வதற்காக நீங்கள் கெகல் உடற்பயிற்சிகளை செய்திருக்கலாம். ஆனால், இந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்யாமல் விட்டால், பின்நாட்களில் வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களில் 40 சதவீதத்திற்கும் மேலானவர்கள் சிறுநீர் அடங்காமல் வரும் பிரச்சனைகள் உள்ளன. அதிலும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் பாதிக்கும் மேலானவர்கள் இந்த பிரச்சனையை அனுபவித்து வருகிறார்கள். இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் பலவீனமாகி விடுவதால் இந்த பிரச்சனைகள் வரும். கெகல் உடற்பயற்சிகளை செய்தால் பலவீனமான தசைகளை உறுதிப்படுத்தவும் மற்றும் இந்த அறிகுறிகளை மேம்படுத்தவும் முடியும்.


பிறப்பு கட்டுப்பாடு


உங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாதவிடாய் தவறியிருந்தால், உங்களால் மேற்கொண்டு கர்ப்பம் தரிக்க முடியாது என்றும், நீங்கள் இறுதி மாதவிடாய் பருவத்தை அடைந்து விட்டதாகவும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறு. உங்களுக்கு மாதவிடாய் எந்த வகையில் வந்து கொண்டிருந்தாலும், அதாவது தொடர்ந்து வராமல் விட்டுவிட்டு வந்தாலோ, முறையான இடைவெளி இல்லாமல் வந்தாலும் கூட, நீங்கள் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, பிறப்பு கட்டுப்பாடு செயல்பாடுகளை முழுமையாக உறுதி செய்து கொள்ளும் வரையிலும் தொடர்ந்து செய்து வரவும். குறைந்தபட்சம் ஒரு ஆண்டோ அல்லது அதற்கும் மேலான நாட்களோ மாதவிடாய் வராமல் இருந்தால் தான், பிறப்பு கட்டுப்பாட்டை நிறுத்துவது பற்றி யோசிக்க வேண்டும்.

கருத்தடை சாதனங்கள்


இளம் தம்பதியினரை விட குறைவாகவே 40 வயதுக்கும் அதிகமான வயதுடைய தம்பதியினர் கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது குறைவாகவே உள்ளது. நீங்கள் ஹார்மோன் பிறப்பு கட்டுப்பாடு முறைகளை பயன்படுத்தி வந்தாலும் அல்லது இறுதி மாதவிடாய் பருவத்தை கடந்திருந்தாலும் மற்றும் இதற்கு மேலும் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் இருந்தாலும் கூட - கருத்தடை சாதனங்களை தொடர்ந்து பயன்படுத்துவது நல்ல யோசனை என்று தான் சொல்ல முடியும். அதுவும் ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும் போதும், இந்த கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டியது அவசியமாகும்.

செக்ஸ்


40 வயதுகளில் உள்ள பெண்களில் 40 சதவீதம் பேரும் மற்றும் 50 வயதுகளில் உள்ள பெண்களில் 50 சதவீதம் பேரும், முந்தைய ஆண்டில் பெண்ணுறுப்பு வாயிலாக உடலுறவு கொள்ளவில்லை என்ற தகவலை Journal of Sexual Medicine என்ற இதழ் வெளியிட்டுள்ளது. மேலும், இவ்வாறு உணர்ச்சியற்ற செக்ஸ் வாழ்க்கை அவர்களுடைய ஆரோக்கியத்தை பாதித்துள்ளதையும் தெரிவித்துள்ளது இந்த இதழ். இறுதி மாதவிடாய்க்குப் பின்னர் ஈஸ்ட்ரோஜன்களின் அளவு குறைந்து கொண்டே வருவதால், பெண்ணுறுப்பின் தசைகள் தட்டையாகவும் மற்றும் மொத்தமாகவும் மாறும். இதனால் செக்ஸ் அனுபவம் அதிக வலி கொண்டதாகவும், அரிப்பு, வறட்சி, எரிச்சல் மற்றும் அசௌகரியம் கொண்டதாகவும் இருக்கும். ஆனால், தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டால் இந்த பிரச்சனைகளை சமாளிக்கும் விதத்தில், பெண்ணுறுப்பை ஈரப்பதத்துடனும், நீட்சித் தன்மை அதிகமாக இருக்கும் வகையிலும் வைத்திருக்க முடியும்.

உள்ளாடைகளை அணிதல்


உங்களுடைய மாதவிடாய் விட்டுவிட்டு வந்தாலோ அல்லது இரத்தப்போக்கு அடங்காமல் போய்க் கொண்டிருந்தாலோ, சூழல்களை சமாளிக்கும் விதத்தில் நீங்கள் உள்ளாடைகளை அணிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால், இதன் காரணமாகவும் கூட தொற்றுகளும், எரிச்சலும் வரக்கூடும். உள்ளாடைகளில் உள்ள பிளாஸ்டிக் பட்டை காற்று உள்ளே புகுவதை தடுப்பதால், வெப்பமும், வியர்வையும் வரக் காரணமாகி விடும். ஒரே உள்ளாடையை நீண்ட நேரத்திற்கு அணிவதால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஏற்படவும் கூடும். மேலும், தொடர்ந்து அந்த இடத்தை தேய்ப்பதால் வல்வர் எரிச்சலும் கூட வரக்கூடும். எனவே உள்ளாடைகளை அடிக்கடி மாற்றிக் கொள்வதும், பேட்களை கையில் வைத்துக் கொண்டு எதிர்பாராத மாதவிடாய்களை எதிர்கொள்வதும் மற்றும் இரத்தப்போக்கை கெகல் பயிற்சிகளால் கட்டுப்படுத்துவதும், வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் அல்லது மருந்துகளை எடுத்துக் கொள்வதும் உங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும். இதன் மூலம் உள்ளாடைகளை நீங்கள் சார்ந்திருக்க வேண்டிய தொல்லை இருக்காது. இவ்வாறு உள்ளாடைகளை நீங்கள் பயன்படுத்தும் போது, குறைந்தது 4 மணிநேரத்திற்கு ஒருமுறை வேறொன்றை மாற்றிக் கொள்ளவும்.

மருத்துவருக்கு டாட்டா!


அமெரிக்க குழந்தைகள் நலம் மற்றும் மகப்பேறு கல்லூரியின் சமீபத்திய வழிகாட்டுதல்களின் படி, 30 மற்றும் அதற்கும் மேல் வயதான, தொடர்ந்து 3 முறை நெகடிவ் பாப் சோதனைகள் (மார்பக காம்பு பரிசோதனைகள்) கண்ட பெண்களுக்கு ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பாப் சோதனைகள் செய்தால் போதும் என்று சொல்கிறது. ஆனால், இதற்காக உங்களுடைய வருடாந்திர பரிசோதனைகளை தவிர்க்க வேண்டியதில்லை. உங்களுடைய மகப்பேறு மருத்துவ ஆலோசகர் வருடத்திற்கு ஒருமுறை செய்யும் மார்பக பரிசோதனைகள் மற்றும் இரு கைகளால் செய்யும் இடுப்பு பரிசோதனைகள் மூலம் புற்றுநோய், ஓவரியன் நீர்க்கட்டிகள் மற்றும் கர்ப்பப்பை கட்டிகள் போன்ற ஆரோக்கியத்திற்கு உலை வைக்கும் பிரச்சனைகளை கண்டறிய வேண்டும். மேலும் சூடான எரிச்சல் முதல் பிறப்பு கட்டுப்பாடு அல்லது உங்களுடைய செக்ஸ் ஆர்வம் வரை எந்தவொரு விஷயத்திற்கும் அறிவுரைகளை கேட்டுப் பெறுவது தான், நல்ல பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல