வெள்ளி, 4 ஜூலை, 2014

கனடாவில் குத்தாட்டம் போட்ட குஷ்பு

திமுகவில் இருந்து விலகிய கையோடு கனடாவில் உள்ள தமிழர் அமைப்புகளின் அழைப்பை ஏற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்க அங்கு சென்றார் குஷ்பு.கண்ணைக் கவரும் சேலையில் தோன்றி ரசிகர்களை வசீகரித்த குஷ்பு, மேடையில் பாடிய பாடல்களுக்காக நடனமும் ஆடி வந்திருந்த கூட்டத்தினரை மகிழ்வித்தாராம்..!அங்கு அவர் போட்ட குத்தாட்டம்தான் இன்றைக்கு ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரபரப்புச் செய்தி

குஷ்பு.... இந்தப் பெயர் 90களில் தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் பேரினால் உச்சரிக்கப்பட்ட பெயர்.

கண்சிமிட்டி, தலையை சாய்த்து பேசும் மேனரிசம்... எந்தப் பெண்ணிடம் இல்லாத ஒன்று அது ஏதோ உன்னிடம் இருக்கிறது என்று கவிப்பேரரசு வைரமுத்துவே வர்ணிக்கும் அளவிற்கு இருந்தது.

சினிமாவில் வாய்ப்பு இல்லாவிட்டால் என்ன சின்னத்திரையில் ஜொலிக்கிறேன் என்று எபிசோடுக்கு ஒரு ஜாக்கெட் போட்டு ஜாக்பாட் நிகழ்ச்சியில் கலக்கினார்.

கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் குஷ்பு ஆடும் ஆட்டம் பங்கேற்பாளர்களையும், பார்வையாளர்களையும் ஆடவைக்கும்.

அதுமட்டுமல்ல ஜீ தமிழ் டிவியில் நம்ம வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குஷ்பு ஆடும் ஆட்டம் பிரசித்தி பெற்றது.

சினிமா, சின்னத்திரையில் ஆடும் ஆட்டத்தை விட அரசியல் களத்தில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக குஷ்புவின் பேச்சுதான் பரபரப்பு. பிரசார களத்தில் குஷ்புவைக் காண தனி கூட்டமே கூடியது. ( ஆனால் ஓட்டு வரலேயே என்ற கவலை நமக்கு வேண்டாம்)

அரசியலை விட்டு விலகிய கையோடு போதும்டா சாமி... உனக்கு ஒரு கும்பிடு உங்க அப்பாவுக்கு ஒரு கும்பிடு என்று போட்டுவிட்டு கனடா போன குஷ்பு அங்கே மேடையில் போட்ட ஆட்டம்தான் ஹைலைட்.

அதுவும் வயலட் நிற பட்டுப்புடவையில் ஜொலி ஜொலித்த குஷ்பு... லைட்டாய் போட்ட குத்து இருக்கிறதே... அப்பப்பா அசந்து போனார்கள் கனடா தமிழ் ரசிகர்கள்.

எந்தக் கவலையும் இன்றி மேடையில் குஷ்பு ஆடிய ஆட்டம்தான் இன்றைக்கு ஊடகங்களின் ஹைட் டாபிக்.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் முடங்கிவிட மாட்டேன் என்று வழக்குகள் வந்தபோதே அதை எதிர்த்து வெற்றி கண்ட குஷ்பு. அரசியலில் இருந்து விலகிய பின்னரும், அதே உற்சாகத்தோடு நிகழ்ச்சி நடுவராகவும், சீரியலிலும் உற்சாகமாக வலம் வருகிறார். மேடையிலும் பங்கேற்று தன்னுடைய இருப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார் குஷ்பு. அது அதுதான் குஷ்பு.






Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல