புதன், 13 ஆகஸ்ட், 2014

2 வயது தங்கையுடன் வீட்டில் ஆபாச படம் பார்த்த 15 வயது சிறுவன் - கைது செய்யக் கோரிய தாய்

வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்ததற்காக தனது 15 வயது மகனைப் போலீசில் பிடித்துக் கொடுக்க தாயே முயற்சி செய்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த சாவோண்டா கால்மேன் (40) என்ற பெண்மணி ரியல் எஸ்டேட் ஏஜண்டாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டிற்கு திரும்பிய சாவேண்ட், தனது 15 வயது மகன் இரண்டு வயது தங்கையை மடியில் அமர வைத்தவாறு, டிவியில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்து திடுக்கிட்டார்.

உடனடியாக அவசர எண் 911-க்கு தகவல் தெரிவித்தார் சாவோண்டா. ஏதோ அசம்பாவிதம் நடந்ததாக நினைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் போலீசார்.

ஆனால், தனது மகன் ஆபாச படம் பார்ப்பதாகவும், அதனால் அவனை கைது செய்து சிறையில் அவர்களிடம் அடையுங்கள் எனத் தெரிவித்துள்ளார் சவோண்டா.

அமெரிக்க சட்டப்படி வீட்டில் தனியாக உட்கார்ந்து ஆபாச படம் பார்ப்பது குற்றமாகாது. எனவே, சட்டப்படி தங்களால் அச்சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்றும், மாறாக அமைதியான முறையில் மகனுக்கு அறிவுரை சொல்லுமாறு சவோண்டாவிடம் வலியுறுத்தி விட்டு சென்றனர் போலீசார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல