திங்கள், 4 ஆகஸ்ட், 2014

கோச்சடையான் படத்தில் நடித்தவர் பெயர் என்ன? - ரிசர்வ் வங்கி தேர்வில் கேள்வி!!

ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான தேர்வில், கோச்சடையான் படத்தில் நடித்த நடிகர் பெயர் என்ன? மற்றும் பாபிஷாப் இந்திப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன? - ஆகிய இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

இது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.


மத்திய ரிசர்வ் வங்கியின் உதவி அலுவலர் பணிக்கான (கிரேட்-2) தேர்வு நாடு முழுவதும் ஆன்-லைன் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கணிதம், அறிவுக் கூர்மை, ஆங்கிலம், பொது அறிவு என நான்கு பிரிவுகளில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.

அறிவுப் பிரிவில் மொத்தம் 80 வினாக்கள் கேட்கப்பட்டன.

அதில், 42-வது வினாவாக, கோச்சடையான் படத் தில் நடித்த நடிகர் பெயர் என்ன எனக் கேட்டு, ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஷாருக்கான், இவர்களில் யாரும் இல்லை என பதில்கள் தரப்பட்டிருந்தன.

மற்றொரு கேள்வியாக இந்தியில் வெளியான பாபிஷாப் படத்தில் துப்பறியும் பாத்திரத்தில் நடித்த நடிகை பெயர் என்ன எனக் கேட்டு வித்யாபாலன், கரினா கபூர், பிரியங்கா சோப்ரா, இவர் களில் யாரும் இல்லை எனப் பதில்கள் தரப்பட்டிருந்தன.

இப்படி சினிமா தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டதற்கு சிலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு தரப்போ, இதில் தவறென்ன இருக்கிறது..? விளையாட்டைப் போலத்தான் சினிமாவும் வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது. விளையாட்டுத் துறைப் பற்றி கேள்வியை அனுமதிக்கும் நாம், சினிமா கேள்வி என்றதும் விமர்சிப்பதில் அர்த்தமில்லை, என்று தெரிவித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல