திங்கள், 29 செப்டம்பர், 2014

ஜெயலலிதா இனி 'ஜெயில்' லலிதா - இந்தி நடிகர் சக்தி கபூர் கிண்டலால் சர்ச்சை

மும்பை: இந்தி வில்லன் நடிகரான சக்தி கபூர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்து கூறியுள்ள கிண்டல் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.



சக்தி கபூரின் இந்த கிண்டல் கருத்தால் அதிமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். ஜெயலலிதாவுக்குக் கிடைத்துள்ள சிறைத் தண்டனையை வைத்து இந்தக் கருத்தைக் கூறியுள்ளார் சக்தி கபூர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்திருந்தார் சக்தி கபூர். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது ஜெயலலிதா குறித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தவறையும் மீடியாக்கள் மக்கள் முன்பு அம்பலப்படுத்த தவறுவதில்லை.

"நீங்கள் விதைப்பதை நீங்கள்தான் அறுவடை செய்ய வேண்டும். மீடியாவின் சக்திதான் சமூகத்தில் நடைபெறும் ஒவ்வொரு தவறையும் வெளிக் கொண்டு வரக் காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘ஜெயில்' லலிதா ஆகியுள்ளார்.

நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தவறு செய்தால் அதை நாம் அனுபவித்தாக வேண்டும். நாம் என்ன காரியம் செய்கிறோமோ அதற்கான பலன் தான் நமக்குக் கிடைக்கும் என்றார் சக்தி கபூர்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல