புதன், 29 அக்டோபர், 2014

வீட்டை விட்டு விரட்டப்பட்டாரா நடிகர் கார்த்திக்?.. திரையுலகில் பரபரப்பு!

சென்னை: நடிகர் கார்த்திக் சொத்துப் பிரச்சினை காரணமாக விட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸிலும் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.



இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் நிலைமை குறித்து திரையுலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கார்த்திக் வீட்டை விட்டு வந்து விட்டதாக பேச்சு இருந்தது. இருப்பினும் தற்போதுதான் கார்த்திக் மூலம் அது உறுதியாகியுள்ளது. நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த கார்த்திக் தனது சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கோரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்தான் கார்த்திக். இவருக்கு இரண்டு மனைவியர், இருவரும் சகோதரிகள். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் நடிகரான கார்த்திக் சிறந்த நடிகராக வலம் வந்தவர்.

மெளன ராகம் கார்த்திக்கின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய படங்களுள் ஒன்று. பல்வேறு படங்களில் நடித்துள்ள கார்த்திக்கின் மகன் கெளதமும் தனது தாத்தா, தந்தை வழியில் நடிகராகி நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கார்த்திக்கின் குடும்பத்துக்கும், அவருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. நீண்ட காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சினையால் கார்த்திக் பெரும் கஷ்டத்துக்குள்ளானார். அவரது கையில் ஒரு சொத்து கூட இல்லாத நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இருந்த வீட்டையும் கூட கார்த்திக் இழந்திருப்பதாக தெரிகிறது. அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு குடும்பத்தினர் கூறி விட்டதாக சொல்கிறார்கள். அவரும் வெளியே வந்து விட்டார். தற்போது தனியாக தங்கியுள்ளார்.

நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்ற கார்த்திக், தனது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரைப் பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

இவ்வளவு பிரபலமாக இருந்தும், திரையுலகம் முழுவதும் நண்பர்களைக் கொண்டிருந்தும் கூட கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை மட்டுமல்ல திரையுலகினரையே கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல