செவ்வாய், 4 நவம்பர், 2014

கட்டா மீட்: காஷ்மீரி மட்டன் ரெசிபி

தேவையான பொருட்கள்:

மட்டன் - 750 கிராம்
வெங்காயம் - 3 (நறுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன்
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
கருப்பு ஏலக்காய் - 2
உலர்ந்த வெந்தய இலை - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மசாலா - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 4 (நீளமாக கீறியது)
மாங்காய் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி - 1/2 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கிராம்பு, சீரகம், பட்டை மற்றும் கருப்பு ஏலக்காய் சேர்த்த தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு 5 நிமிடம் குறைவான தீயில் வதக்க வேண்டும்.

பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

அடுத்து உலர்ந்த வெந்தய இலை, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மசாலா சேர்த்து, வர மிளகாயை துண்டுகளாக்கி போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 2-3 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் மட்டன் துண்டுகளைப் போட்டு, 8-10 நிமிடம் மசாலா மட்டனில் சேரும் வரை நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் அதில் 2-3 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து, அதில் மாங்காய் தூள், பச்சை மிளகாய், சோம்பு பொடி சேர்த்து கிளறி, மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 2-3 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான காஷ்மீரி ரெசிபியன கட்டா மீட் ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல