குடும்ப தம்பதிகள் தமது குடும்பத்தில் இருக்கும் பல பிரச்சினைகளை வெற்றி கொண்டு தமது குடும்பத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என திட்டமிட வேண்டியது அவசியம். அதாவது தமக்கு இரண்டு பிள்ளைகள் போதுமா அல்லது மூன்று பிள்ளைகள் போதுமா என திட்டமிட்டு கொள்வது சிறந்தது. இன்றைய கால கட்டத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினால் பல குடும்பங்கள் தடுமாறும் போது குடும்பத்தை திட்டமிட்டு அமைத்து கொள்வது தங்களுக்கு இருக்கும் பிள்ளைகளை நன்கு கற்பித்து ஆரோக்கியமாக வளர்க்க உதவும். இவ்வாறு குடும்பத்தை சரியாக திட்டமிடாது கர்ப்பம் தரித்து பிள்ளைகள் பிறக்கும் போது குடும்பங்கள் தடுமாறுவது தவிர்க்க முடியாமல் போகின்றது. இந்நிலையில் இருக்கும் பிள்ளைகளையும் சரியாக கவனிக்காமல் போகும் நிலை ஏற்படுகின்றது. இதனால் குடும்பங்களை திட்டமிட உதவும் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை பற்றி அறிந்திருப்பது அவசியமாகும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை நிரந்தரமானதா?
ஆம் பெண்களுக்கு செய்யப்பட்டு வருகின்ற குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையானது நிரந்தரமான கட்டுப்பாட்டு முறையாகும். இதனை LRT சத்திர சிகிச்சை என அழைப்பார்கள். தம்பதிகள் தமக்கு தேவையான குழந்தைகளை பெற்றெடுத்த பின்னர் இதனை செய்வதற்கு ஆலோசனை வழங்குவோம். பின்னர் மீண்டும் ஒரு குழந்தை பெறலாமா என சிந்திப்பவர்களுக்கு இம்முறைக்கு செல்வது கடினம். ஏனெனில் இது ஒரு நிரந்தரமான குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை முறையாகும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையில் என்ன நடைபெறும்?
பெண்களில் செய்யப்படும் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையில் கர்ப்பப்பையின் இருபுறத்திலும் இருக்கும் பலோப்பியன் குழாய்களில் கட்டுப்போடப்பட்டு வெட்டப்படுகின்றது. இதன் போது சூல் முட்டைகளும் விந்துக்களும் சந்திக்க முடியாது தொடர்பு துண்டிக்கப்படுகின்றது. இதனையே LRT சத்திர சிகிச்சை என அழைக்கப்படுகின்றது.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் பெண்களின் மாதவிடாய் சக்கரத்தில் மாற்றங்கள் வருமா?
பல பெண்கள் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்வதற்கு தயங்குவதற்கு காரணம் தமது மாதவிடாய் குருதிப்போக்கில் மாற்றங்கள் வந்து விடும் அதிகம் போகத் தொடங்கும் என நினைத்தேயாகும். இவ்வாறு பலர் சொல்லும் உண்மையற்ற தகவல்களை நினைத்து இவ்வித சத்திர சிகிச்சைக்கு பின்வாங்குவது வழக்கம். ஆனால் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திரசிகிச்சையால் மாதவிடாய் போக்கில் மாற்றங்களோ அல்லது அதிகரிப்போ ஏற்படமாட்டாது. இது குறித்து நீங்கள் பயப்படாது தகுந்த மருத்துவ ஆலோசனை மூலம் உங்களது சந்தேகங்களை போக்க வேண்டும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையினால் பெண்களின் உடல் பருமன் அதிகரிக்குமா?
குடும்பக்கட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சையினால் பெண்கள் பருமன் அதிகரிக்கும் உடல்நிறை கூடிவிடும் என நினைப்பது தவறு. இவ்வித உண்மையற்ற கதைகளை நம்பி நீங்கள் முடிவுகளை எடுக்கத் தயங்க வேண்டாம். பெண்களின் குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையால் பெண்களின் உடல்நிறை அதிகரிக்காது. அதற்கு வேறு காரணங்கள் இருக்குமா என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தவர்களிலும் மீண்டும் கருத்தரிக்கும் சந்தர்ப்பங்கள் உள்ளதா?
நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்தார்கள் என சில கதைகள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது மிகவும் அரிதாக நடைபெறும் சம்பவம். எங்கோ யாருக்கோ நடைபெற்று விட்ட இவ்வாறான மிக அரிய நிகழ்வுகளை நினைத்து நீங்கள் பயப்பட்டு குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்ய பின்னிற்க வேண்டாம். நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தவர்கள் மீண்டும் கருத்தரித்த சந்தர்ப்பங்கள் மிக மிக குறைவு.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சைக்கு வயிற்றை பெரிதளவில் வெட்ட வேண்டுமா?
குடும்பக்கட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சை பெண்களில் முன்னர் வயிற்றை வெட்டித்தான் செய்யப்பட்டது. ஆனால் தற்போது லப்ரஸ் கோப்பி முறையில் வயிற்றில் பெரிய வெட்டுக்காயங்கள் இல்லாது சிறிய துளை மூலம் செய்யப்படும். இதனால் பெண்கள் ஒரே நாளில் வீடு செல்லக் கூடியதாக இருக்கும். இதற்கு பின்னர் ஏற்படும் வயிற்று வலியும் குறைவு. இதனால் இந்த நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சை பிரசவம் முடிவடைந்த எவ்வளவு காலத்தில் செய்ய முடியும்?
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையானது கடை சிப் பிரசவத்தின் போது செய்ய முடியும். இல்லா விட் டால் சில மாத கால இடைவெளியின் பின்னர் கூட செய்ய முடியும்.
குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்களில் இதனை மீள் இயங்க வைக்கலாமா?
நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் சிலவேளை மனம்மாறி மீண்டும் ஒரு குழந்தை பெற வேண்டும் என நினைப்பது சில சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்றது. சில பெண்கள் கணவரை இழந்து மீள் திருமணம் செய்த சந்தர்ப்பத்திலும் அல்லது ஏற்கனவே இருந்த பிள்ளையை விபத்திலோ அல்லது டெங்கு போன்ற கொடிய நோயினாலோ இழந்த சந்தர்ப்பத்திலும் மீண்டும் ஒரு பிள்ளை வேண்டும் என்று திட்டமிடுவார்கள். இந்நிலையில் ஏற்கனவே நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்த பெண்கள் என்ன செய்வது என ஏங்குவது உண்டு. இவர்களுக்கு நாம் ஏற்கனவே செய்யப்பட்ட நிரந்தர குடும்பக்கட்டுப்பாட்டு LRT சத்திர சிகிச்சையை மீள் சீராக்கி மீண்டும் இயங்க வைக்க சத்திர சிகிச்சை செய்ய வேண்டி வரும். இவ்வாறு மீள் சீராக்கல் சத்திர சிகிச்சை கிட்டத்தட்ட நூற்றுக்கு ஐம்பது சதவீதம் வெற்றி தந்து குழந்தை பெற வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறான பிரச்சினை உள்ளவர்கள் வைத்திய ஆலோசனை பெற்று தமக்குரிய பிரச்சினையை தீர்க்க முடியும்.
டாக்டர். சுஜாகரன் நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக