சனி, 28 பிப்ரவரி, 2015

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!

வசதியாகத் தான் இருக்கிறது மகனே… நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது, முன்பு நானும் இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதற நான் எனது கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது !



முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடி அலைந்து நீ தேர்ந்து எடுத்ததை அறிந்த போது
அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி
எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன் !!!...

இது வரையில் ஒரு முறை கூட என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும் என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை மறக்காமல் அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சி அடைகிறது.

நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில் உன்னைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் எனக்கு இருந்தாலும் உனது படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர் வினையே இது என்று இப்போது அறிகிறேன் !

இளம் வயதில் நீ சிறுகச் சிறுக சேமித்த உனது அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே நீ செலவு செய்கிறாய் ஆயினும்… உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.

அன்று நான் கற்றுக் கொடுத்தேன் உனக்கு… வாழ்க்கை இது தான் என்று !

இன்று, நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… உறவுகள் இது தான் என்று !

 மனதைத் தொட்ட வரிகள- முகநூல்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல