சனி, 14 மார்ச், 2015

குவைத்தில் மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் பெண் பாலியல் பலாத்காரத்தால் பலி

குவைத் நாட்டில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளம் தமிழ் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.



மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராமத்தை சேர்ந்த 22வயதுடைய சோமசுந்தரம் சர்நீதியா என்ற இளம் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். இப்பெண் கடந்த நான்கு மாதத்திற்கு முதல் குவைத் நாட்டிற்கு சென்றிருந்தார்.
இந்த பெண் கடந்த முதலாம் திகதி வேலை செய்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.

இவரைப் பற்றி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் எதுவுமில்லாததால் இந்த யுவதியின் குடும்ப உறவினர்கள் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இப்பெண்ணுக்கு நான்கு வயதுடைய குழந்தை உண்டு எனவும் இவரது கணவர் இறந்து விட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இப்பெண் கடுமையான பாலியல் சித்திரவதை காரணமாகவே உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல