வெள்ளி, 20 மார்ச், 2015

காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களை அறிய இந்த இணையதளத்துக்கு.....

பொதுமக்களின் வசதிக்காக காணாமல் போன மற்றும் அடையாளம் தெரியாத சடலங்களின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளங்களை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.


பொதுமக்கள் காணாமல் போன தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்களைக் கண்டுபிடித்துத் தரும்படி, அருகில் உள்ள காவல்நிலையங்களில் புகார் அளிப்பது வழக்கம். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி காணாமல் போன நபர்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்வர்.

இதேபோல், அடையாளம் தெரியாத நிலையில் மீட்கப் படும் சடலங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்துவர். சமயங்களில், இவ்வாறு மீட்கப்படும் சடலங்கள், அவர்களின் காவல் எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் வசித்தவர்களுடையதாக இருந்து விடுகிறது. இதனால், அவர்கள் விசாரணையில் காலதாமதம் தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

எனவே, இத்தகைய சிரமங்களைக் குறைக்க புதிய யுக்தி ஒன்றை போலீசார் வகுத்துள்ளனர். அதன்படி, புதிய இணையதளப் பக்கங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. அவற்றில் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் தொகுக்கப் பட்டுள்ளன.

தமிழகத்தில் காணாமல் போன நபர்களின் விபரங்கள் மற்றும் அடையாளம் தெரியாத இறந்த பிரேதங்களின் விவரங்கள் தமிழக காவல்துறையில் உள்ள அந்தந்த மாநகர காவல் ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு, இந்த இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆகவே, பொதுமக்கள் காணாமல் போன தங்களது உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களின் விவரங்களை எளிதில் அறிய கீழ்காணும் வலைதளங்களில் சென்று அறிந்து கொள்ள வழிவகை செய்யப் பட்டுள்ளது.

இதேபோல், அடையாளம் தெரியாத சடலங்களின் விவரங்களையும் இதில் பார்த்து தெரிந்து கொள்ளுமாறு போலீசார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
 இணையதள முகவரி

1. http://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/MissingHomePage?0

மேலும் கீழ்கண்ட முகவரிகளும் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை பதிவிட உதவுபவை ஆகும்.

2. http://ncrb.gov.in/missing.htm

3. http://www.trackthemissingchild.gov.in/trackchild/index/php

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல