வெள்ளி, 3 ஏப்ரல், 2015

சங்கிலி திருடியின் உள்ளாடைக்குள் இருந்து பணம், தொலைபேசி மீட்பு

யாழ். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலய தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



நேற்று வியாழக்கிழமை காலை இத்திருவிழாவில் கழுத்தில் இருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் வயதான பெண் ஒருவர் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு திருடி நின்று உள்ளார்.

இதை அடுத்து வயதான பெண் சத்தம் போட்டார். பொதுமக்கள் திரண்டு வந்து திருடியைமடக்கிப் பிடித்து விசாரித்தபோது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும் அவருடன் 02 பெண்கள் வந்திருந்தனர் என்றும் திருட்டு நோக்கத்துக்காகவே வந்திருந்தனர் என்றும் தெரிவித்தார். பொலிஸாரிடம் பெண்ணை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட யுவதியின் உள்ளாடைக்குள் இருந்து கைத்தொலைபேசி ஒன்றும், 15ஆயிரம் ரூபா பணமும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 04 தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டன.

இவருடன் கூடவே வந்திருந்த பெண்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல