புதன், 15 ஏப்ரல், 2015

வாக்கு வங்கி அரசியலை முறியடிக்க, முஸ்லிம்களின் வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும்: சிவசேனா

வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, முஸ்லிம்களை வளர்ச்சி பெறச் செய்ய வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.



அண்மையில் மும்பையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம் இயக்கத்தின் தலைவர் ஓவாய்ஸி, சிவ சேனா கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், "தைரியம் இருந்தால் உத்தவ் தாக்கரே ஹைதராபாத்துக்கு வரட்டும்" என மிரட்டும் தொணியில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில், சிவசேனா கட்சி மூத்த தலைவர் சஞ்சய ரவுத் தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில், எழுதியுள்ள கட்டுரையில், "சகோதரர் ஒவாய்ஸி அவர்களே. முஸ்லிம் வாக்குகள் விற்கப்படும் வரை அந்தச் சமூகம் பின் தங்கியே இருக்கும். ஆனால், அச்சமூகத்தின் தலைவர்கள் மட்டும் பணக்காரர்களாவர்.

நீங்கள், முஸ்லிம் வாக்கு வங்கியை வைத்து அரசியல் செய்வதால் உங்கள் சமூகத்துக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்றால்? அதற்கு என்னிடம் பதிலில்லை. ஆனால், வாக்கு வங்கி அரசியல் தேசத்துக்கு கேடு விளைவிக்கும்.

எனவே, வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும். இக்கருத்தை சிவசேனாவை நிறுவிய பால் தாக்கரேவும் ஆதரித்தார். முஸ்லிம்களுக்கு வாக்குரிமை இல்லாவிட்டால்தான், மதசார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொண்டு ஓட்டுக்காக சமரசம் செய்வோரின் உண்மை முகம் வெளியில் தெரியும்.

ஓவைசி போன்றவர்கள் பாம்பை போன்று மோசமானவர்கள். அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து வளர்த்துவிடுவது நாட்டுக்கு நல்லதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல