வியாழன், 23 ஏப்ரல், 2015

கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வரு­டங்­க­ளாக சங்­கி­லியால் கட்டி வைத்த மனைவி

தனது கணவர் வீட்டை விட்டு வெளி­யே­று­வதை தடுக்க அவரை இரு வருட கால­மாக வீட்­டுடன் இணைந்த மரத்­தா­லான குடி­லொன்றில் மனை­வி­யொ­ருவர் சங்­கி­லியால் கட்டி சிறை வைத்த சம்­பவம் பெருவில் இடம்­பெற்­றுள்­ளது.



சிறிய கிரா­ம­மான ஹுவா­யு­யானைச் சேர்ந்த பப்லோ தமாரிஸ் கொரா­கு­யில்லோ என்ற 86 வயது நபரே இவ்­வாறு தனது மனை­வியால் கட்டி வைக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­நி­லையில் அய­ல­வர்கள் வழங்­கிய தக­வலின் பிர­காரம் கொட்­டிலில் சிறை வைக்­கப்­பட்­டி­ருந்த தமா­ரிஸை உள்ளூர் அதி­கா­ரிகள் மீட்­டுள்­ளனர்.

மிகவும் பல­வீ­ன­ம­டைந்த நிலையில் காணப்­பட்ட அவர் தற்­போது சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

அவ­ரது மனைவி அவ­ரது நல­னுக்­கா­கவே இவ்­வாறு அவரை சங்­கி­லியால் கட்டி வைப்­ப­தாக அவ­ருக்கு தெரி­வித்­த­தாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல