செவ்வாய், 14 ஏப்ரல், 2015

வாஷிங் மிஷினுக்கு குட்பை

விடாப்பிடியான கறை… அழுக்கு… இவற்றை துவைப்பது பெரும் சவால் குடும்பத் தலைவிகளுக்கு. அதிலும், வாஷிங் மிஷின் இருந்தால் துணிகளை சரியான அளவில் நிரப்பி, தண்ணீர், சலவை சோடா ஆகியவற்றை கலந்து, டைமரை செட் பண்ணி… என்று நீளும் சலவைப் பட்டியல், துணி துவைப்பதை ஒரு எரிச்சலான விஷயமாக மாற்றிவிடுகிறது. ஆனால், இந்த வாஷிங் மிஷின் இம்சை எல்லாம் இன்னும் சில காலம்தான். துவைப்பதை எளிமையாக்கும் வகையில் கையடக்க வடிவத்திலான ‘டால்பி’ என்ற நவீன இயந்திரம் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.



நாம் தினமும் குளியலுக்கு பயன்படுத்தும் ஒரு பார் சோப்பைவிட கொஞ்சம் பெரியது. இதுதான் இந்த கருவியின் அதிகபட்ச அடையாளம். மற்றபடி இந்தக் கருவியை ஒரு பெண் தன்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்துக்கொண்டு, செல்லும் இடங்களில் எல்லாம், நடமாடும் வாஷிங் மிஷின் போல், அலுப்பின்றி துணிகளைத் துவைத்துக்கொள்ள முடியும்.

முழுவதும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் இந்த டால்பி கருவி மூலம் துவைக்கும் போது சாதாரண நல்ல நீரை பயன்படுத்தினால் போதும். உதாரணமாக, நீங்கள் கை கழுவும் வாஷ் பேஷினில், ஒரு வெள்ளை நிற அழுக்கு சட்டையை வைத்து, சட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீரை நிரப்பி தேக்கினால் போதும். அந்த தண்ணீரில் இந்த கையடக்க டால்பியை மூழ்கச் செய்து, மின் இணைப்பு கொடுத்தால், அரை மணி நேரத்தில் உங்கள் சட்டை பளிச்சென்று மாறிவிடும்.

வாஷிங் மிஷினில் போட்டு உழற்றி, வாஷிங் சோடா பயன்படுத்தினாலும் போகாத அழுக்கு கறைகளைக் கூட டால்பி கருவி விரட்டுவதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இதற்கு காரணம் இந்த கருவியில் இருந்து எழுந்து, தண்ணீரில் பரவும் அதிக திறன் கொண்ட மீயொலி அலைகளின் அலைவரிசைகள்தான். சட்டை மூழ்கியுள்ள தண்ணீருக்குள் உள்ள டால்பி கருவி, அதிக அழுத்தம் மற்றும் வீச்சு திறன் கொண்ட மீயொலி அலைகளை டால்பி பரப்புகிறது.

தண்ணீரில் அலை அலையாக பாய்ந்து பயணம் செய்யும் இந்த மீயொலி அலைகள், சட்டையில் உள்ள அழுக்குகளை உடைத்து, வெளியேற்றி துணிகளை பாதுகாக்கிறது. இந்த கையடக்க கருவியின் விலை 89 டாலர்கள்தான். நம் ஊர் மதிப்பில் 5 ஆயிரத்து 600 ரூபாய்தான்.

jannalmedia




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல