சனி, 4 ஏப்ரல், 2015

ஜேர்மன்விங்ஸ் விமான அனர்த்தம் போன்று, வேண்டுமென்றே விமானத்தை மோதும் கதையைக் கொண்ட திரைப்படம்

ஜேர்­மன்விங்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றை பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்­ப­கு­தியில் துணை விமானி மோதி­யதால் 150 பேரும் உயி­ரி­ழந்த சம்­பவம் உலகை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கிய சில தினங்­களில், அதே­போன்று வேண்­டு­மேன்றே விமா­னத்தை மோதச் செய்யும் கதையைக் கொண்ட திரைப்­ப­ட­மொன்றும் சில நாடு­களில் வெளி­யா­கி­யுள்­ளது.



ஆர்­ஜென்­டீ­னாவில் தயா­ரிக்­கப்­பட்ட "ரெலோடஸ் சல்­வாஜெஸ்" எனும் ஸ்பானிய மொழி திரைப்­ப­ட­மா­னது பழி­வாங்கல் தொடர் ­பான 6 கதை­களைக் கொண்­டதாகும்.

நபர் ஒருவர், விமா­னத்தின் விமானி அறைக்குள் தான் மட்டும் இருந்­த­வாறு கதவை பூட்டி விட்டு தனது பெற்­றோரின் வீட்டின் மீது விமா­னத்தை மோது­வ தும் இக்­க­தை­களில் ஒன்­றாகும்.

கடந்த ஒஸ்கார் விரு­து­வழங்கல் விழாவில் சிறந்த வெளி­நாட்டு மொழி படத்­துக்­கான விரு­துக்கும் இப்­படம் பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ ருந்­தது.

டேமியன் ஸிப்ரோன் இயக்­கிய இப்­படம், "வைல் டேல்ஸ்" எனும் பெயரில் ஆங்­கி­லத்­திலும் வெளி­யா­கி­யுள்­ளது.

ஜேர்­மன்விங்ஸ் நிறு­வ னம் விமானம் கடந்த 24 ஆம் திகதி மோதிய நிலை யில், பிரிட்­டனில் கடந்த 27 ஆம் திகதி இப்­படம் வெளி­யா­கி­யமை பலரை வியப்­புக்­குள்­ளாக்­கி­யது.

ஜேர்­மன்விங்ஸ் துணை­வி­மா­னி­யான அன்ரீஸ் லுபிட்ஸின் நட­வ­டிக்­கைக்கு இப்­ப­டமும் தாக்கம் செலுத்­தி­யதா எனவும் சிலர் கேள்வி எழுப்­பினர்.

இந்­நி­லையில், வைல்ட்டேல்ஸ் பட­மா­னது புனைக்­கதை அடிப்­ப­டை­யி­லா­னது எனவும் உண்­மை­யான சம்­ப­வங்­க­ளுக்கும் அதற்கும் இடையிலான ஒற்றுமையானது தற்செயலானது எனவும்" பி.எவ்.ஐ. எனும் பிரித்தானிய திரைப்பட நிறுவகம் தெரி வித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல