திங்கள், 29 ஜூன், 2015

6 வயது சிறு­மிக்கும் 35 வயது நப­ருக்கும் திரு­மணம்

ராஜஸ்­தானில் 35 வயது நபர் ஒருவர் 6 வயது சிறு­மியை திரு­மணம் செய்து கொண்ட கொடுமை நடந்­துள்­ளது. ராஜஸ்தான் மாநிலம் சிட்­டோகர் மாவட்­டத்தில் உள்ள கங்­கரார் கிரா­மத்தைச் சேர்ந்­தவர் ரதன் ஜாட். பஞ்­சா­யத்து உறுப்­பினர்.



அவ­ருக்கும், 6 வயது சிறு­மிக்கும் பந்­தோலி அல்­லது சோனி­யானா கிரா­மத்தில் வைத்து திரு­மணம் நடை­பெற்­றுள்­ளது. திரு­மணம் நடந்த உடன் இரு­வீட்­டாரும் கிரா­மத்தை விட்டு வெளி­யே­றி­விட்­டார்கள்.

திரு­ம­ணத்­தின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­படம் ஒன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை வட்ஸ் அப்பில் பர­வி­யது. அதன் மூலம் தான் குழந்தை திரு­மணம் நடை­பெற்­றது அனை­வ­ருக்கும் தெரிய வந்­தது. இந்த சம்­பவம் குறித்து அறிந்த பொலிஸ் உயர் அதி­கா­ரிகள் ரதன் ஜாட் மீது வழக்­குப்­ப­திவு செய்­யு­மாறு கங்­கரார் பொலி­ஸா­ரு­க்கு உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

ரதன் ஜாட்டின் திரு­ம­ணத்தை ரத்து செய்ய நீதி­மன்­றத்தில் மனு தாக்கல் செய்­யப்­படும் என்று மாவட்ட ஆட்­சியர் வேத் பிரகாஷ் தெரி­வித்­துள்ளார். திரு­மணம் பற்றி கிரா­மத்­தா­ரிடம் கேட்டால் யாரும் எந்த தக­வ­லையும் தெரி­விக்க மறுக்­கி­றார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல