வளர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எப்போதும் எதிர்க்கும் வகையில் கனடிய குடியுரிமைச்; சட்டங்கள் கடுமையாக்கப் பட்டுள்ளன.
கனடாவில் உள்ள 140,000 மேற்பட்ட ஸ்ரீலங்கா பிரஜைகள், கனடிய அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள புதிய குடிவரவுச் சட்டங்கள் நடைமுறைப படுத்தப் பட்டதும் தங்கள் கனடிய குடியுரிமையை இழக்கும் அல்லது ஸ்ரீலங்காவுக்கு திரும்பும் ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளார்கள், இந்த சட்டம் ஆணையிடுவதின்படி இந்த இரண்டாம் தர பிரஜைகளின் குடியுரிமை அந்தஸ்து எந்தக் கட்டத்திலும் பறிக்கப்படலாம்.
கடந்த வாரம் சட்டமாக்கப்பட்ட இந்த புதிய குடிவரவு சட்ட மசோதா தெரிவிப்பது, புதிதாக கனடிய குடியுரிமை பெற்றவர்கள் கனடாவில் பிறந்தவர்களைக் காட்டிலும் குறைவான உரிமைகளையே கொண்டிருப்பார்கள் என்று.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ‘த நேசனு’க்கு தெரிவித்தது, இந்தச் சட்டம் ஏராளமான ஸ்ரீலங்காவாசிகளுக்கு அவர்களின் இனத்தை கருத்தில் கொள்ளாமல் எல்லோரையும் அவர்களது கனடிய பிரஜா உரிமையை இழக்கும் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என்று.
“அவர்களுடைய அரசாங்கத்தின் சட்டங்களை நாங்கள் மதித்து ஏற்றுக் கொள்ளும் அதேவேளை, அவர்களது திடீர் யோசனைகளுக்கு ஏற்ப இந்த மக்களின் குடியுரிமை அந்தஸ்தை அவர்கள் இரத்தாக்குவதை அனுமதித்தால் ,அது ஒரு விடை தெரியாத புதிரை ஏற்படுத்துவதுடன் ஒரு இரண்டாம் தர பிரஜைகளை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது” என அவர் சொன்னார். ”இந்தப் புதிய சட்டம், ஏராளமான ஸ்ரீலங்காவாசிகளை குறிப்பாக தமிழர்களை கனடிய குடியுரிமை அந்தஸ்தை பெறுவதை முயற்சிப்பதையும் பின்வாங்கச் செய்துவிடும், இது அவர்களின் அரசாங்கத்துக்கு சாதகமாக வேலை செய்ய முயலும் ஒரு நகர்வாகும்”.
இந்தச் சட்டத்தின் கீழ் வேறு ஒரு தேசிய இனத்தை கொண்டிராத கனடாவில் பிறந்த கனடியர்கள் மாத்திரமே தங்கள் கனடிய குடியுரிமையை ஒருபோதும் இழக்கமாட்டார்கள், (அவர்கள் மற்றொரு தேசிய இனத்தை பெற விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள்). இந்த முதல்தர குடிமக்கள் மீது எந்த வகையான குற்றங்கள் சுமத்தப்பட்டாலும் பரவாயில்லை அவர்களது குடியுரிமை ஒருபோதும் பறிக்கப்பட மாட்டாது. மறுபக்கத்தில் வேறு தேசிய இனத்தை சேர்ந்த கனடியர்கள் (மற்றும் வேறு ஒரு குடியுரிமையை பெறும் தகுதி அவர்களுக்கு உள்ளது) இப்போது ஒரு இரண்டாம் நிலை அந்தஸ்துள்ளவர்களாவார்கள், அவர்கள் கனடாவில் பிறந்திருந்தாலும் கூட மசோதா சீ – 24 ன்படி அவர்களது குடியுரிமையை பறிக்க முடியும்.
இந்த சட்டம் காரணமாக கனடாவில் உள்ள ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது ஏனெனில் இதுவரை கனடாவில் பிறந்தவர்களை இப்படி நடத்தக்கூடாது என பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள், புதிய சட்டம் பாரபட்சமானதாக உள்ளது. கனடிய அரசாங்கம் புதிய சட்டம் கனடியர்களைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப் பட்டுள்ளது எனக்கூறி அதை நியாயப் படுத்தியுள்ளது.
“தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்தவதைத் தவிர ஒரு அரசாங்கத்துக்கு வேறு எந்த உயரிய நோக்கமும் இருக்க முடியாது என்பதை எங்கள் அரசாங்கம் நன்கு அறியும்…. அதனால்தான் எப்பொழுதும் உருவாகக் கூடிய ஜிகாதி பயங்கரவாத அச்சுறுத்தலை, பயங்கரவாதம், வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உளவு பார்த்தது அல்லது கனடா மற்றும் கனடிய ஆயுதப் படையில் உள்ள வீரமான எங்கள் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் எதிராக ஆயுதம் தூக்கியது போன்ற கொடிய குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட, இரட்டை தேசிய இனத்தை கொண்டவர்களின் குடியுரிமையை திரும்ப பெறுவதின் மூலம் எதிர்ப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்”. கனடிய குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சான்டர் இவ்வாறு தெரிவித்தார்.
குடியுரிமையை அகற்றுவதற்கு வழி செய்யக்கூடிய குற்றங்கள் பற்றிய பட்டியல் எதிர்காலத்தில் விரிவு படுத்தப் படலாம் என சட்டபூர்வ புலம்பெயர்ந்தவர்கள் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள். இதற்கு மேலாக மசோதா சீ – 24 தண்டனை வழங்குவது குற்றச் செயற்பாட்டிற்காக நாடு கடத்தப் படுதலை - இந்த நடவடிக்கை பல நூறு வருடங்களுக்கு முன்பே கைவிடப் பட்டுவிட்டது, இன்றைய ஜனநாயகத்தில் அதற்கு இடமில்லை.
“வெளிவிவகார அமைச்சுக்கு இந்த விடயத்தில் கருத்து தெரிவிப்பதற்கு சுதந்திரம் இல்லை இதை சட்டமாக்குவது அவர்களின் உரிமை” என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகிஷினி கொலன்னே தெரிவித்தார். “வேறு நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள ஸ்ரீலங்காவாசிகள் திரும்பி வருவதை வரவேற்கிறோம், ஆனால் அந்த முடிவு முற்றிலும் அவர்களின் விருப்பப்படி இருக்க வேண்டும், நாங்கள் அவர்களைக் கட்டாயப் படுத்தவோ அல்லது அவர்களுக்கு திரும்பிச் செல்லும்படி நெருக்குதல் வழங்கவோ முடியாது” கொலன்னே இரட்டைக் குடியுரிமை திட்டம் பற்றியும் சுருக்கமாக பேசும்போது,” ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு திரும்பி வந்து நாட்டின் அபிவிருத்தியில் பங்கு பெற வாய்ப்பு கிடைத்துள்ளது” எனத் தெரிவித்தார்.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (ஓ.ஈ.சி.டி) கூற்றுப்படி, 2006ல் ஓ.ஈ.சி.டி யில் வாழும் ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒருவர் படித்த தொழில் நிபுணர்கள். ஸ்ரீலங்கா பிரஜைகளைப் பற்றிக் கிடைத்துள்ள புள்ளி விபரங்களின்படி கனடாவிலுள்ள தமிழர் வம்சாவளியினரின் எண்ணிக்கை மட்டும் 2011ல் 143,000 ஆகும். மொத்த ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்த சமூகத்தவர்களைப் பற்றிய எண்ணிக்கை இணையத்தில் கிடைக்கவில்லை.
‘த நேசன்’ கொழும்பிலுள்ள கனடிய உயர் ஸ்தானிகரை மேலதிக விபரங்களுக்காக தொடர்பு கொள்ள முயன்றது. எனினும் தொலைபேசி மூலம் அவர்களை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
- றுக்ஷானா றிஷ்வி
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக