ஞாயிறு, 14 ஜூன், 2015

பேனாவிற்கு பிரம்படி மாறுமா சவூதி அரேபியா?

அவ­னது பெயர் ரயிப் பதாவி. பதா­வியின் பெயர் சர்­வ­தேச அர­சி­யலில் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது என்றால், அவன் மீதான பார்வைக் கோணங்கள் இதற்குக் கார­ண­மாகும். இந்த மனிதன் இஸ்­லாத்தை அவ­ம­தித்தான் என்­பது முதற்­கோணம். கருத்துச் சுதந்­திரம் பேசி, சமயம் தொடர்­பான கருத்­தா­டல்­களை ஊக்­கு­வித்தான் என்­பது இரண்­டா­வது கோணம்.



ரயிப் பதாவி 1983ஆம் ஆண்டு பிறந்­தவர். தமது 23ஆவது வயதில் என்ற Free Saudi Liberals என்ற பெய­ரி­லான இணை­யத்­த­ளம் ஒன்­­றை தொடங்­கி­யி­ருந்தார். இத­ன­னூ­டாக, தமது கருத்துக்­களைப் பதிவு செய்தார். மற்­ற­வர்­களின் கருத்­தா­டல்­க­ளுக்கும் வாய்ப்­ப­ளித்தார். இதில் இஸ்லாம் பற்றி மாத்­தி­ர­மன்றி, சவூதி அரே­பியா பற்­றியும் பல கருத்­துக்கள் பதிவு செய்­யப்­பட்­டன.

சரி­யாக மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்னர், சவூதி அதி­கா­ரிகள் பதா­வியைக் கைது செய்­தார்கள். இஸ்­லாத்தை இழி­வு­ப­டுத்­துதல், சம­யத்தைத் துறத்தல், சட்­ட­வி­ரோ­த­மான இணை­யத்­த­ளத்தை ஆரம்­பித்தல் என்­பது பதா­விக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டு­க­ளாகும். இந்தக் குற்­றச்­சாட்­டுக்­களின் அடிப்­ப­டையில் பதா­விக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இந்தத் தண்­ட­னைக்கு எதி­ராக பல மேன்­மு­றை­யீ­டுகள். இந்த வழக்கு கடை­சி­யாக, சவூதி அரே­பி­யாவின் உச்ச நீதி­மன்­றத்­திற்கு வந்­தது. சவூதி நீதி­மன்றம் பத்­தாண்டு கால சிறைத்­தண்­டனை மற்றும் ஆயிரம் பிரம்­ப­டிகள் என்ற தண்­ட­னையை ஊர்­ஜிதம் செய்­தி­ருக்­கி­றது. கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை உச்ச நீதி­மன்­றத்தின் தீர்ப்பு அறி­விக்­கப்­பட்­டதை பதா­வியின் மனைவி ஊர்­ஜிதம் செய்­துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜித்தா மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்பின் பிர­காரம், ஆயிரம் பிரம்­ப­டிகள் 50 தட­வை­களில் நிறை­வேற்­றப்­பட வேண்டும். அதுவும், பொது மக்கள் முன்­னி­லையில் பிரம்­ப­டிகள் வழங்­கப்­பட வேண்டும் என்­பது நீதி­மன்­றத்தின் தீர்ப்பு. கடந்த ஜன­வரி மாதம் 50 பிரம்­ப­டிகள் வழங்­கப்­பட்­டன.

தண்­டனை முழுமை பெற வேண்­டு­மாயின், இன்­னமும் 19 தட­வைகள் பதாவி பிரம்­ப­டி­களை எதிர்­கொள்ள வேண்டும்.

இதில் முக்­கி­ய­மான விடயம் யாதெனில், ஜன­வரி 9ஆம் திக­திக்குப் பின்னர் பதா­விக்கு பிரம்­படி வழங்­கப்­ப­ட­வில்லை. பல்­வேறு கார­ணங்­களின் அடிப்­ப­டையில், அடுத்த தண்­டனை பல தட­வைகள் பின்­போ­டப்­பட்­டி­ருக்­கி­றது. கடை­சி­யாக, கடந்த வெள்­ளிக்­கி­ழமை பிரம்­படி கொடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். இதுவும் பின்­போ­டப்­பட்­ட­தாக பதா­வியின் மனைவி கன­டாவில் இருந்து ட்விற்றர் செய்தி மூலம் அறி­வித்­தி­ருக்­கிறார்.

ஜன­வ­ரியில் பதாவி பெற்ற பிரம்­ப­டிகள் மூலம், அவ­ரது காலிலும் பிருஷ்­டங்­க­ளிலும் காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. அந்தக் காயங்கள் ஆற­வில்லை என்று மருத்­து­வர்கள் கூறி­யி­ருந்­தார்கள். அதன் அடிப்­ப­டையில், மருத்­துவ ரீதி­யான கார­ணங்­களை முன்­வைத்து அடுத்த பிரம்­ப­டியை சவூதி அர­சாங்கம் தவிர்த்­த­தாக அறிக்­கப்­பட்­டது.

பதாவி மீதான தண்­டனை என்­பது சர்­வ­தேச அளவில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய விடயம். இந்தத் தண்­ட­னையை நிறுத்த வேண்­டு­மென மேற்­கு­லகம் வலி­யு­றுத்­து­வ­தையும், அதனை சவூதி அதி­கா­ரிகள் நிரா­க­ரிப்­ப­தையும் அடிக்­கடி காண்­கிறோம். தண்ட னையை நிறுத்­து­மாறு வலு­வாகக் குரல் கொடுத்த நாடு­களில் அமெ­ரிக்­காவும் ஒன்று. மத்­திய கிழக்கின் சம­கால அர­சியல் யதார்த்­தத்தை ஆராய்ந்தால், அமெ­ரிக்­காவின் கோரிக்­கையை சவூதி அதி­கா­ரிகள் தட்ட முடி­யுமா என்ற கேள்வி எழும்.

பிரம்­படித் தண்­டனை விவ­கா­ரத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் அழுத்­தத்­திற்கு சவூதி அரே­பியா அடி­ப­ணிந்­தி­ருக்­கி­றது என்றால், இது முக்­கி­ய­மான திருப்­பு­முனை என்­பதில் சந்­தேகம் கிடை­யாது. ஒரு­வரை அதீ­த­மாக துன்­பு­றுத்­தக்­கூ­டிய தண்­டனை முறை­களை ஒழித்துக் கட்டும் முயற்­சி­க­ளுக்கு கிடைத்த வெற்­றி­யா­கவும் பார்க்க முடியும்.

இத்­த­கைய தண்­ட­னைகள் சவூ­தியில் மாத்­திரம் அன்றி, வேறு பல நாடு­க­ளிலும் அமுலில் இருக்­கின்­றன. ஆப்கான், ஈரான் போன்ற நாடு­களைக் குறிப்­பிட்டுச் சொல்ல முடியும். ேயமன், தன்­சா­னியா முத­லான நாடு­க­ளையும் மறந்து விட முடி­யாது.

தனது ஆளு­கைக்கு உட்­பட்ட பிராந்­தி­யத்தில், இஸ்­லா­மிய இராச்­சியம் என்ற இயக்கம் கட்­ட­விழ்த்து விடும் தண்­ட­னை­களும் ஏராளம்.

இந்­நா­டு­க­ளிலும் பிராந்­தி­யங்­க­ளிலும் பல­த­ரப்­பட்ட குற்­றங்­க­ளுக்­காக உடலைத் துன்­பு­றுத்­தக்­கூ­டிய தண்­ட­னைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. இஸ்­லாத்தை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக பதா­விக்கு பிரம்­படி கிடைத்­தது. மது­பானம் அருந்­துதல் முத­லான குற்­றங்­க­ளுக்கு ஈரானில் கசை­யடித் தண்­டனை வழங்­கப்­படும்.

இது தவிர, சமூக நெறி­பி­றழ்­வாகக் கரு­தப்­படும் பாலியல் கண்­ணோட்­டத்தைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய ஒரு­வரும் கசை­யடி பெறலாம். இதில் கவ­னிக்­கத்­தக்க விடயம் யாதெனில், ஒருவர் ஒரு­பா­லினச் சேர்க்­கை­யாளர் என்று சந்­தே­கிக்­கப்­படும் பட்­சத்­திலும், அவ­ருக்கு தண்­டனை வழங்­கப்­ப­டக்­கூ­டி­ய­தாக இருப்­பது சற்று கவ­னிக்­கத்­தக்க விட­ய­மாகும்.

பெண்­க­ளது விட­யத்­திலும், இந்தத் தண்­டனை தவ­றாக பயன்­ப­டுத்­தப்­பட்ட சந்­தர்ப்­பங்கள் பற்றி பர­வ­லாகக் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

திரு­ம­ணத்­திற்கு புறம்­பான உற­வு­களைப் பேணி சோரம் போன­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்ட பெண்­க­ளுக்கு கசை­யடி அல்­லது பிரம்­படித் தண்­டனை வழங்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்கள் ஏராளம். இஸ்­லா­மிய இராஜ்­ஜி­யத்தின் கட்­டுப்­பாட்டில் உள்ள பகு­தி­களில், இத்­த­கைய குற்றம் இழைத்த பெண்கள் கல்லால் அடித்து கொல்­லப்­படும் போக்கு தொடர்ந்து இடம்­பெற்று வரு­கி­றது.

தண்­டனை பெற்­ற­வர்­களில் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பெண்­களும் உண்­டென சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள் கூறு­கின்­றன. சில சந்­தர்ப்­பங்­களில் தம்மைப் பாலியல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­வர்கள் யார் என்­பதை அடை­யாளம் காட்ட முடி­யாத பெண்கள், சோரம் போன­வர்­க­ளாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு தண்­டனை பெற்ற சம்­ப­வங்கள் பற்­றியும் மனித உரிமை அமைப்­புக்கள் அறி­வித்­துள்­ளன.

பிரம்­படி, கசை­யடி, கல்லால் அடித்துக் கொல்­லுதல் போன்ற தண்­ட­னைகள் ஒரு தேசத்தின் இறை­யாண்­மை­யுடன் தொடர்­பு­டை­யவை என்­பது உண்மை தான். எனினும், இவை கொடு­மை­யா­னவை என்­ப­தையும் மறுக்க முடி­யாது.

ஒரு­வ­ருக்கு நியா­ய­மற்ற முறையில் தண்­டனை வழங்­கப்­ப­டு­கி­ற­தென ஒட்­டு­மொத்த உல­கமும் கருதும் பட்­சத்தில், அந்தத் தண்­டனை குறித்து கேள்வி எழுப்பும் உரிமை சர்­வ­தேச சமூ­கத்­திற்கு உள்­ளது என்­ப­தையும் குறிப்­பிட்­டாக வேண்­டி­யி­ருக்­கி­றது.

இத்­த­கைய தண்­ட­னைகள் பற்றி சவூதி அரே­பி­யா­விற்கும், சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இடையில் வாதப் பிர­தி­வா­தங்கள் நிக­ழக்­கூ­டிய களம் ஐக்­கிய நாடுகள் சபை­யாகும்.

இந்தக் களத்தில் சவூ­தியின் சட்­டங்கள் மற்றும் சர்­வ­தேச சட்­டங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கருத்­தா­டல்கள் நிகழ்­கின்­றன. தமது சட்­டங்கள் ஷரீ-­ஆவை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தென சவூதி அரே­பியா வாதி­டு­கி­றது. இந்த சட்­டங்­களின் கீழ் வழங்­கப்­படும் தண்­ட­னைகள் நியா­ய­மா­னவை என்­பது சவூ­தியின் வாத­மாகும்.

சவூதி அரே­பி­யாவின் செயற்­பா­டு­களை ஆட்­சே­பிக்கும் நாடுகள் சர்­வ­தேச சட்­டங்கள் எனக் கரு­தப்­ப­டக்­கூ­டிய ஆவ­ணங்­களை சுட்­டிக்­காட்­டு­கின்­றன. சர்­வ­தேச மனித உரி­மைகள் சாசனம், சிவில் மற்றும் அர­சியல் உரி­மைகள் பற்­றிய சர்­வ­தேச சம­வாயம், சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான சம­வாயம் போன்­ற­வற்றை அவை சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இத்­த­கைய பிர­க­ட­னங்­களும் சம­வா­யங்­களும் உள்­நாட்டு நீதித்­து­றையின் மீது சர்­வ­தேசத் தலை­யீ­டுகள் என சவூதி அரே­பியா வாதி­டு­கி­றது. கடு­மை­யான தண்­ட­னைகள் சமூ­கத்தைப் பாது­காத்தல் என்ற நோக்­கத்தைக் கொண்­டவை என்­பதை பலரும் புரிந்து கொள்ள மறுக்­கி­றார்கள் என்­பது சவூ­தியின் வாத­மாகத் திகழ்­கி­றது.

இங்கு அல்­குர்­ஆனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சவூ­தியின் சட்­டங்கள் சரி­யா­ன­வையா அல்­லது அடிப்­படை உரி­மை­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கும் சர்­வ­தேச சம­வா­யங்கள் முக்­கி­ய­மா­ன­வையா என்ற கேள்­விக்குள், கடு­மை­யான தண்­ட­னைகள் பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் மையம் கொண்­டி­ருப்­பதைக் காண்­கிறோம்.

இதில் சவூதி அரே­பியா என்ற நாடு, ஷரீஆ சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட சட்ட திட்­டங்­களின் அடிப்­ப­டையில் சட்­டத்­தையும் ஒழுங்­கையும் பேண முடியும் பல நாடு­களின் அணியை தலைமை தாங்கி வழி நடத்­து­கி­றது.

இந்­நா­டுகள் மனித உரி­மை­களை மீறு­வ­தாக ஐக்­கிய நாடுகள் சபையில் பர­வ­லாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­ட­போ­திலும், பல வரு­டங்­க­ளாக இவற்றின் நிலைப்­பாட்டில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை. இந்­நா­டு­களில் தொடர்ச்­சி­யாக கடும் தண்­ட­னைகள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.

இவை மாத்­தி­ர­மன்றி, இஸ்­லா­மிய கோட்­பா­டு­க­ளுக்கு முர­ணாக செயற்­ப­டு­வ­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­படும் ஐஎஸ் போன்ற அமைப்­புக்­களும் கடு­மை­யான தண்­ட­னை­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இவற்றை எந்த வகை­யிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக கோரிக்கை விடுப்பதன்மூலம் சவூதி அரேபியாவின் சட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதோ, இஸ்லாமிய இராச்சியம் வழங்கும் தண்டனைகளை நிறுத்துவதோ சாத்தியமான விஷயம் அல்ல.

ஓட்டுமொத்த உலகமும் சேர்ந்து அழுத்தம் தொடுக்கும் பட்சத்தில், அந்த அழுத்தத்தை தனியாக நின்று சமாளிக்கும் ஆற்றல் சவூதி அரேபியாவிற்கு கிடையாது என்பது சமகால அரசியல் யதாhர்த்தமாகும்.

பதாவி மீதான பிரம்படியை நிறுத்த வேண்டும் என்ற கோஷம் சர்வதேச இயக்கமாக மாறி சவூதியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்குமாயின், அது முக்கியமான திருப்புமுனை என்பதை மறுக்க முடியாது.

தாம் செய்வது நியாயமற்றதாக இருக்கும் பட்சத்தில் சர்வதேச சமூகம் தம்மீது பாயும் என்ற உணர்வு எந்தவொரு தேசத்திற்கும் ஏற்படுமாயின், அந்தத் தேசம் சரியான திசையில் செல்லும்.

அத்தகையதொரு பின்புலம், கசையடி பிரம்படி முதலான கொடூரமான தண்டனைகளை ஒழிப்பதற்குரிய சர்வதேச இயக்கத்தை வெற்றிப் பாதையில் செலுத்தலாம்.

 சதீஷ் கிருஷ்ணபிள்ளை





Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல