வெள்ளி, 19 ஜூன், 2015

மாணவனின் ஆணுறுப்பில் உதைந்த அலங்கோல ஆசிரியர்

மாணவன் ஒருவனின் அந்தரங்க உறுப்பில் ஆசிரியர் ஒருவர் உதைத்தமையினால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான மாணவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.



அங்கு பிரபல பாடசாலையொன்றில் 10 ஆம் வகுப்பில் கல்விக்கும் மாணவனே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்கள் பாடசாலையில் சிரமதானம் செய்யும்போது, மேற்படி மாணவன் சிரமதானம் செய்யாமல் நின்றதாகவும் அதனை அவதானித்த குறித்த ஆசிரியர், சப்பாத்து காலால் மாணவனை உதைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் அணிந்திருந்த சப்பாத்தின் முன்பக்கத்தின் கூர்மையான பகுதி மாணவனின் அந்தரங்க உறுப்பில் பட்டமையால் அதிகளவான இரத்தம் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மாணவனுக்கு சாவகச்சேரி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மாணவனின் பெற்றோர், வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல