திங்கள், 27 ஜூலை, 2015

உருளைக்கிழங்கு தயிர் கிரேவி

தேவையான பொருட்கள்:

வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
பிரியாணி இலை - 1
கடலை மாவு - 2 டீஸ்பூன்
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத் தூள், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் கடலை மாவு சேர்த்து பொன்னிறமாக கிளறி விட வேண்டும்.

பின் அதில் தயிர் கலவையை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

கலவையானது எண்ணெயில் இருந்து பிரியும் போது, அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து குறைவான தீயில் 4-5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் கொத்தமல்லியைத் தூவி சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கினால், உருளைக்கிழங்கு தயிர் கிரேவி ரெடி!!!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல