சனி, 11 ஜூலை, 2015

அனந்திக்கு கதவடைத்த கஜேந்திரகுமார்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற நோக்கத்தை கை விட்டு விட்டார் என்று இவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.



இவரின் இளைய மகள் கடந்த தினங்களில் பருவம் அடைந்து விட்டார். இதனால் மகளின் விடயங்களை கவனிக்கவே இவருக்கு நேரம் போதுமானதாக உள்ளதாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சந்தர்ப்பம் கேட்டு இருந்தார். மாவை சேனாதிராசா வில்லனாக மாறி கெடுத்து விட்டார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று தூது அனுப்பி பார்த்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அசைந்து கொடுக்கவே இல்லை.

சுயேச்சையாக களத்தில் இறங்குகின்ற ஜனநாயக போராளிகள் கட்சியின் கதவுகள் இப்போது வரை இவருக்காக திறக்கப்பட்டுத்தான் உள்ளன. ஆனால் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுடன் சேர்ந்து செயற்படுகின்றமை எதிர்காலத்துக்கும், பாதுகாப்புக்கும் நல்லது அல்ல என்று யோசிக்கின்றார்.

இவர் சுயேச்சைக் குழுவாக போட்டியிட விண்ணப்பப் படிவம் வாங்கி வைத்திருக்கின்றார். ஆனால் போதுமான ஆட்கள் கூட்டுச் சேரவில்லை.

இதே நேரம் இவர் ஒதுங்கி இருக்கின்ற பட்சத்தில் வரங்களும், வரப்பிரசாதங்களும் வழங்கப்படும், வட மாகாண சபையில் அமைச்சர் பதவிகூட கிடைக்கப் பெறலாம் என்று தமிழ் தேசிய தலைமையிடம் இருந்து இவருக்கு விலை பேசப்பட்டு உள்ளது என்றும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News Source:


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல