செவ்வாய், 7 ஜூலை, 2015

அமெரிக்க குடியுரிமையை கைவிட முடிவு

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமையைக் கை விடுவதற்கு முடிவு செய்துள்ளார். இது தொடர்பான ஆவணங்களை தாம் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் கையளித்துள்ளதாக கோத்தாபய ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.



ஐ.நா.வின் விசாரணை அறிக் கையில், கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 40 அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் அமெரிக்க குடியுரிமையைக்�
கைவிட முடிவு செய்துள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் சட்டங்களின் படி, அமெரிக்க குடிமகன் ஒருவர், உலகில் எந்தப் பாகத்தில், போர்க்குற்றங்களை இழைத்திருந்தாலும், அவரை அமெரிக்க சட்டங்களின் கீழ் விசாரித்து தண்டிக்க முடியும்.

கோத்தாபய ராஜபக்ஷ மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால், அவர் மீது அமெரிக்கா நேரடியாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை இருந்ததாலேயே அவர் அமெரிக்க குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல