வியாழன், 17 செப்டம்பர், 2015

உங்க பல் மஞ்சளா இருக்கா? இதோ அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள்!

ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இப்பழத்தில் உள்ள அமிலம், பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கும். அதற்கு ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து, அதில் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பற்களை துலக்க வேண்டும். இப்படி தினமும் இரு வேளை செய்து வந்தால், நல்ல பலனை உடனடியாகக் காணலாம்.



எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், அவற்றைக் கொண்டு பற்களைப் பராமரித்தால், பற்களில் உள்ள கறைகள் அகலும். அதற்கு எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, பற்களை தேய்த்து குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும்.

ஆரஞ்சு தோல் கூட பற்களில் உள்ள நீங்கா மஞ்சள் கறைகளை நீக்க உதவும். அதற்கு ஆரஞ்சு பொடியை உலர்த்தி, பொடி செய்து, தினமும் அதனைக் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அதனைக் கொண்டு வாரம் ஒருமுறை பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். குறிப்பாக இதனைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்க வேண்டாம். ஏனெனில் இது பற்களின் எனாமலை அரித்துவிடும்.

துளசி இலைகள் கூட மஞ்சள் பற்களுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசி இலைகளை பொடி செய்து தினமும் பற்களை துலக்கலாம் அல்லது தினமும் சிறிது துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

பல நூற்றாண்டுகளாக பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அத்தகைய கிராம்பு பல் மற்றும் ஈறு பிரச்சனைகளைப் போக்குவதோடு, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கவும் உதவும். அதற்கு கிராம்பை பொடி செய்து தினமும் அதனைக் கொண்டு பற்களை துலக்க வேண்டும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல