வியாழன், 29 அக்டோபர், 2015

லண்டன் தேவன் துன்னாலையில் வைத்து காவாலிகளால் படுகொலை!! நடந்தது என்ன?

துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பிள்ளையார் ஆலய அன்னதான மண்டபத்துக்குள் வைத்து இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டுள்ளார்.



துன்னாலை கிழக்கைச் சேர்ந்த தேவதாசன் (தேவன்) என்பவரே கொலை செய்யப்பட்டவராவார். தேவன் நீண்டகாலமாக லண்டனில் வாழ்ந்து வந்து பின்னர் கொழும்பு - யாழ்ப்பாண வாகன சேவைக்கு வாகனங்கள் வாடகைக்கு விட்டு வந்ததாகத் தெரியவருகின்றது.

துன்னாலையில் ரவுடிகளாகத் தொழிற்படும் குமார் தலைமையிலான சிலருடன் கொலையான தேவன் காணப்பட்டதாகவும் அவர்களுடன் சேர்ந்து ஆலயப் பகுதியில் மது, ஆட்டு இறைச்சி ஆகியன உட்கொண்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

துன்னாலையில் வல்லியானந்தம் குழு (பஜார்) எனப் பெயர் பெற்ற குமார் தலைமையிலான ரவுடிக்கூட்டம் பொலிசாருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளதாகவும் அத்துடன் ஏற்கனவே பளைப் பகுதியில் இடம்பெற்ற ஒரு கொலையுடன் இக் குழு சம்மந்தப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தினை ஆய்வு செய்த புலனாய்வு நிபுணர் ஒருவர், இவர் சிலரால் கொலை செய்யப்பட்டு அல்லது மரணம் சம்பவித்த பிறகு இங்கு கொண்டு வந்து பவுத்திரமாக கிடத்திவிட்டு ஓடி தப்பி உள்ளமை தெளிவாக தெரிவதாகவும் இயல்பாக இறந்திருந்தால் இந்த ஒரு நிலையில் ஒரு உடலாம் இருக்காது எனவும் சுட்டி காட்டினார்.

 newjaffna



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல