வியாழன், 26 நவம்பர், 2015

ரொரான்ரோ (Toronto) கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாக உள்ளது


அரசியல்வாதிகளால் பிரபலமான ரொரான்ரோ கோவில் பயங்கரவாதிகளுக்கு தொடர்ச்சியான வருமானம் ஈட்டும் ஸ்தாபனமாகவும் உள்ளது: கனடிய எல்லை சேவை முகவர்(சி.பி.எஸ்.ஏ) நிறுவனத்தின் இரகசிய அறிக்கை

இந்துக் கடவுள்களின் அழகான நுண்ணிய ஓவியங்களை தன்னுள்ளோ கொண்டுள்ள கனடா கந்தசாமி கோவில் அங்கு பிரார்த்தனை செய்ய வரும் பக்தர்களுக்கு புனிதமான சூழலைத் தருகிறது, அதேபோல அங்கு வந்து செல்லும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. மாலை அணிவிக்கப்பட்ட ஒன்ராரியோ பிரதமர் கத்தலின் வைனை கடந்தவருடம் கோவிலில் வைத்து புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது, பின்னர் பாதுகாப்பு அமைச்சர் ஜேசன் கென்னி பெடரல் தேர்தல் பிரச்சாரத்தின்போது உள்ளுர் கொன்சர்வேட்டிவ் வேட்பாளர் ரோசான் நல்லரட்னத்துடன் அங்கு வந்து சென்றுள்ளார்.



ஒன்ராரியோ முன்னேற்ற கன்சர்வேட்டிவ் தலைவர் பற்ரிக் பிறவுண் ஜூன் மாதம் தனது ருவிற்றர் பக்கத்தில் “ஸ்கார்பரோ புதிய கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என்று பதிவு செய்துள்ளார். அப்போதைய என்.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் 2012ல் கோவில் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்திருப்பதை முகப் புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

ஆனால் கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனம் பெடரல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இரகசிய அறிக்கையின்படி, ரொரான்ரோ கிழக்கு முனையில் உள்ள கந்தசாமி கோவில், கனடிய அரசாங்கத்தினால் பயங்கரவாத அமைப்புகள் என்று குறிப்பிடப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள உலகத் தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது எனச் சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவிலின் அர்ச்சகர் ஒருவர்மீது இடம்பெற்ற நீதிமன்ற வழக்கின்போது பகிரங்கமாக வெளிப்பட்டது. கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவு, பயங்கரவாத குழு எனப் பட்டியலிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு அங்கத்தவராக இந்த ஸ்ரீலங்கா அகதி இருந்துள்ளார் என்பதை உறுதிப் படுத்தியது.

கனடிய குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறை இன்னமும் இந்த விடயத்தை மீள் பரிசீலனை செய்து வருகிறது, ஆனால் கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தின் ஜூலை 2013ன் இவரது அனுமதி மதிப்பீட்டு அறிக்கையில் கனடா கந்தசாமி கோவிலில் பணியிலுள்ள இவரது வேலையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது, அது தெரிவிப்பது அந்த கோவில் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈ யின் முன்னணி நிறுவனமான உலகத் தமிழர் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று.

உலகத் தழிழர் இயக்கம் கனடா கந்தசாமி கோவிலின் கட்டுப்பாட்டை பலவந்தமாக கைப்பற்றியுள்ளது என்று கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனம் எழுதியுள்ளது.”பொது வைபவங்களுக்கு ஏற்ற பல வசதிகளையும் கொண்டுள்ள இந்தக் கோவில் எல்.ரீ.ரீ.ஈக்கு தொடர்ச்சியான வருமானத்தை ஈட்டித்தரும் நிலையமாக உள்ளதுடன் இப்போதும்கூட தொடர்ந்து இயங்கிவருகிறது. இது ஒரு வழிபாட்டுத் தலம் என்பதை அலட்சியம் செய்து இந்த வளாகம் எல்.ரீ.ரீ.ஈ மற்றும் உலகத் தழிழர் இயக்கம் என்பனவற்றின் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டங்களுக்கு கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஸ்கார்பரோ கோவிலின் நிருவாக சமூகத்தின் பணிப்பாளரும் நீண்டகால தன்னார்வ தொண்டருமாக உள்ள தனபாலசிங்கம் கனகசபாபதி கூறுகையில் கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனம் சொல்வது தவறு என்றார். சமீபத்தைய வாராந்தர பூஜையை தொடர்ந்து எழுந்த மெழுகுதிரி புகையை சுத்தமாக்கிய வண்ணம் “இது எல்.ரீ.ரீ.ஈ அல்ல” என்றார் அவர்.. இந்த கோவில் பொதுமக்களின் வசதிக்காக உள்ளது மற்றும் யாரும் பிரார்த்தனை செய்ய இங்கு வரலாம், எனச் சொன்ன அவர் மேலும் தொடருகையில் அவர்களின் அரசியல் அபிலாலாசைகளை நிறைவேற்றும் இடமல்ல இது என்றார். “உண்மையில் உலகத் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு பிரார்த்தனை செய்ய வருகிறார்கள். அவர்களை இங்கு வரவேண்டாம் என்று நான் எப்படிச் சொல்வது”

உலகத் தழிழர் இயக்கத்தின் முன்னாள் பேச்சாளரான நேரு குணரத்னத்தை கடந்த ஜனவரியில் இந்த கோவிலில் வைத்து புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது, ஒரு ஒலிவாங்கியை கையில் பிடித்தபடி அவர் உரையாற்றுகிறார், ஒன்ராரியோ பிரதமர், அவரது அரசியல் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ரொரான்ரோ நகர கவுன்சிலர் ஆகியோர் அதில் இடம் பிடித்துள்ளார்கள். அந்த நிகழ்ச்சி பற்றிய காணொளி ஒன்று, குணரட்னம் தான் கோவிலின் சார்பாக பேசுவதாக தெரிவிப்பதைக் காட்டுகிறது. அதன் பின் அவர் கோவிலில் இருந்து வழங்கப்படும் ஒரு பரிசிலுள்ள வாசகங்களை அவர் வாசித்தபின் அதை கோவில் தலைவரிடம் கொடுக்கிறார் தலைவர் அதனை பிரதமரிடம் கையளிக்கிறார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இறுதி யுத்தத்திற்கான நிதி உதவி பற்றிய ஒரு 2006ம் ஆண்டு அறிக்கையில், எல்.ரீ.ரீ.ஈயானது ரொரான்ரோ மற்றும் லண்டனில் உள்ள கோவில்களின் கட்டுப்பாட்டை கையில் எடுத்துள்ளது, ஏனென்றால் “அவை தமிழ் சமூகத்தை சந்திப்பதற்கும் மற்றும் சாத்தியமான நிதி வளங்களை பெறுதல் ஆகிய இரண்டுக்குமான வழிகளை ஏற்படுத்தி தருகிறது.” கிளர்ச்சியாளர்கள் கோவிலின் நிருவாகக் கட்டமைப்பை கைப்பற்றுவதற்கு படிப்படியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கும் அந்த அறிக்கை மேலும் ரொரான்ரோ கோவிலின் அறங்காவலர் ஒருவர், தமிழர் சுதந்திரப் போராட்டத்துக்காக 1 மில்லியன் டொலர் நிதியுதவி கோரி எல்.ரீ.ரீ.ஈ தன்னை எவ்வாறு அணுகியது என்பதை அவர் விபரித்ததாகவும் கூறியுள்ளது.

ஆனால் ஸ்ரீலங்கா மோதல்கள் 2009ல் முடிவடைந்துவிட்டது, மற்றும் ஒரு நேர்காணலில் கென்னி சொல்லியிருப்பது ஆகஸ்ட் பிரார்த்தனை சேவை ஒன்றில் தான் கலந்து கொண்டபோது அங்கு உலகத் தமிழர் இயக்கத்தினதோ அல்லது எல்.ரீ.ரீ.ஈயினதோ சின்னங்களை தான் காணவில்லை என்று, கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தினரின்; கவலைகள் பற்றிக் குறிப்பிடுகையில் “ இந்த தகவலை கண்டு நான் ஆச்சரியமடைந்தேன்” என அவர் கூறியுள்ளார்.

தவிரவும் வழக்கமாக நவம்பர் 27ல் தமிழ் மாவீரர்களின் வருடாந்த நினைவு தினத்தை விளம்பரப்படுத்தும் ஒரு சுவரொட்டி முன் நுழைவாயிலில் காணப்படும், வழமையாக எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவ முத்திரையுள்ள கொடியும் அதில் காணப்படும், அறிவித்தல் எதுவுமின்றி அங்கு சென்ற நிருபர் ஒருவர் அங்கு கிளர்ச்சி அடையாளங்கள் எதையும் காணவில்லை என்றார். மேலும் கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தின் மதிப்பீட்டுக்கு மாறாக கோவில் நல்ல நிலையிலுள்ள தொண்டு நிறுவனமாகவும் காணப்படுகிறது. இதுபற்றி கனடிய வருமானவரி முகவர் நிறுவனம் கருத்துக்கூற மறுத்துவிட்டது.

“கோவில்கள் குறிப்பாதாக வயது முதிர்ந்தவர்களுக்கும் மற்றும் இளம் குடும்பத்தினருக்கும் ஒரு சமூக மையமாக சேவையாற்றி வருகின்றன” எனத் தெரிவித்தார் மார்க்கம் நகர கவுன்சிலரான லோகன் கணபதி. கணபதி நிருவாகத்தில் தொடர்பு கொண்டிருக்காவிட்டாலும் அவர் கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று கந்தசாமி முகப்புத்தகப் பக்கத்தில் காணப்படுகிறது. “நான் அநேகமாக எல்லாக் கோவில்களுக்கும் செல்வேன், விசேடமாக வழிபாட்டுக்குரிய கனடிய தமிழ் இடங்களுக்கு, ஏனென்றால் நான் என்னை வரவேற்கும் மக்களையும் மற்றும் பக்தர்களையும் மதிக்கிறேன். கனடிய தமிழ் வம்சாவளியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட முதல் பிரதிநிதி என்கிற வகையில் எனக்கு சமூக கடப்பாடுகள் உண்டு” என அவர் தெரிவித்தார்.

கோவில் பற்றிய கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தின் மதிப்பீடு அரசியல் ரீதியாக சில வருகையாளர்களுக்கு மோசமான நிலையை ஏற்படுத்தி இருப்பதை நிரூபிக்க முடியும். கனடிய காவல்துறை (ஆர்.சி.எம்.பி) நடத்திய விசாரணைகளில் இருந்து எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியாளர்களுக்கு நிதி சேகரித்தல் மற்றும் மிரட்டி பணம்பறித்தல் போன்ற செயல்களில் உலகத் தமிழர் இயக்கத்தின் பங்கு இருப்பது வெளியானதை தொடர்ந்து கன்சர்வேட்டிவ் அதனை தடை செய்தது, அதனால் “எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புள்ள தனிநபர்கள் அல்லது குழுவினருடன் எப்போதும் ஒரு தொடர்புற்ற கொள்கையையே அது பராமரிக்க வேண்டும்” என கென்னி தெரிவித்தார்.

எனினும் சமீபத்தைய தேர்தல் பிரச்சாரங்களில் கென்னி மற்றும் அவரது அல
வலர்களால் மத்திய பாதுகாப்பு முகவர்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்ள முடியவில்லை “எனவே எங்களது கூர்மையான நடவடிக்கைகள், தொடர்புள்ள சமூகங்களில் உள்ள நம்பிக்கையான நபர்களின் அடையாள சோதனைகளில் தங்கியிருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, இந்த விடயத்தில் இந்த கோவில் பிரச்சினையான அரசியல் சார்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்று எங்களிடம் சொல்லப்பட்டது. முன்கூட்டியே கனடிய எல்லைச் சேவை முகவர் நிறுவனத்தின் தகவல்களை வெளிப்படையாகவே நான் அறிந்திருந்தால் அங்குள்ள நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்க மாட்டேன்”; என அவர் தெரிவித்தார்.

அவரது விஜயத்தை பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தான் பல கோவில்களுக்கும் சென்றுள்ளதாக பிரவுண் தெரிவித்தார் “இந்த குறிப்பிட்ட கோவிலில் வைத்து குடும்பங்களை நான் சந்தித்தேன் மற்றும் எந்த குறிப்பிட்ட விடயத்தைப் பற்றியும் நாங்கள் பேச முடியாது, எங்களால் சொல்லக்கூடியது இந்தக் குடும்பங்கள் சட்டத்தை மதிப்பவை, கடின உழைப்பாளிகள் மற்றும் கோவிலை நன்கு கவனித்து வருகிறார்கள்”

பிரபாகரன் கந்தசாமி ஐயர் கனடாவுக்கு வந்தது 2005ல் மற்றும் உடனடியாகவே கோவிலில் வேலைக்கு சேர்ந்தார், முதலில் ஒரு தன்னார்வ தொண்டராகவும் பி;ன்னர் ஒரு சம்பளம் வாங்கும் அர்ச்சகராகவும் வேலை செய்தார். அவரது அகதிக் கோரிக்கை 2006ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் நிரந்தர வதிவுரிமைக்கான அவரது விண்ணப்பம் எப்போதும் முடக்கப்பட்டே வருகிறது. 2008ல் அவர் ரொரான்ரோவுக்கு வருவதற்கு முன்பு கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையினரிடம் தான் எல்.ரீ.ரீ.ஈயினரால் பதுங்கு குழிகள் வெட்டுவதற்கும் மற்றும் மணல் மூடைகளை நிரப்புவதற்கும் கட்டாயப்படுத்தப் பட்டதாக தெரிவித்திருந்தார். தான் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு கணணி பயிற்சினை போதித்ததாகவும் அவர் சொல்லியிருந்தார். தான் கிளர்ச்சியாளர்களுடனோ அல்லது அவர்களது கனடிய முன்னணியினருடனோ ஒருபோதும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் மறுத்திருந்தார். “மற்றும் ரொரான்ரொவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ மற்றும் உலகத் தமிழர் இயக்கத்தினர் பற்றிய எந்த அறிவோ அல்லது அவர்கள் சார்பாக கனடா கந்தசாமி கோவிலில் எந்த நிதி சேகரிப்பு முயற்சிகளிலும் ஈடுபடவில்லை” என்று மறுப்பு தெரிவித்து கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை பாதுகாப்பு கண்காணிப்பு பிரிவு தலைவருக்கு எழுதியும் உள்ளார்.

ஆனால் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை அவரது வாக்குமூலங்கள் தொடர்பற்றவையாகவும் முரண்பட்டதாகவும் மற்றும் விபரக் குறைவு உள்ளதாகவும் கருதியது மற்றும் அவர் கனடாவுக்கு வரும்போது அவரிடம் மற்றொருவரின் பெயரிலுள்ள ஒன்ராரியோ சாரதி அனுமதிப் பத்திரம், சுகாதார அட்டை, மற்றும் பல்பொருள் அங்காடி கடனட்டைகள் என்பன இருந்துள்ளமை அவதானிக்கப் பட்டுள்ளது. “ அவர் கனடாவுக்கு ஒரு அகதியாக வந்திருந்தாலும் அவரது கைவசம் இருந்த மோசடி ஆவணங்களின் அளவு கவலை தரும் விடயமாக உள்ளன”

ஸ்ரீலங்கா தலைநகரம் கொழும்பில் உள்ள கனடிய உயர் ஸ்தானிகராலயத்தக்கு அவரைப் பற்றி இரண்டு மொட்டைக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றன, அவர் எல்.ரீ.ரீ.ஈ யினருக்காக நிதி சேகரித்தார் எனவும் மற்றும் ரொரான்ரோ கோவிலுக்கு செல்வோருடன் தகராறில் ஈடுபட்டதாகவும் அதன் விளைவாக கலகம் உண்டானதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது, ஆனாலும் அந்த குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.

39 வயதான அந்த அர்ச்சகரின் நிரந்தர குடியுரிமைக்கான விண்ணப்பம் நீண்ட காலமாக இழுபட்டு வந்துள்ளது, இப்போது அவர் அரசாங்கத்துக்கு எதிராக பெடரல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நவம்பர் 4ல், விசாரணை நடைபெறுகிறது என்பதைத் தவிர தாமதத்துக்கான சரியான விளக்கம் எதனையும் ஒட்டவா வழங்கவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அவருக்கு குடியுரிமை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு குடியேற்ற அதிகாரிகளுக்கு மார்ச் 31, 2016 வரை கால அவகாசம் வழங்கியுள்ளார்.

கோவில் தலைவர் முத்து சுப்பிரமணியம் தெரிவித்தது கந்தசாமி ஐயர் இன்னும் அந்த இடத்திலேயே பணியாற்றுவதாகவும் ஆனால் அவர் இயக்கத்துடன் தொடர்புள்ளதுக்கான எந்த அடையாளமும் இல்லை என்று. உலகத் தமிழர் இயக்கம் கோவிலைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அவர் மறுத்தார் மற்றும் பொறாமைக்கார போட்டியாளர்கள் பொய்யான வதந்திகளை பரப்புகிறார்கள் என அவர் மறுப்புத் தெரிவித்தார்.

இது ஒரு தூய,தூய,தூய மத கோவில்

“இது ஒரு தூய மத கோவில் மற்றும் நாங்கள் இங்கு இருப்பது மக்களுக்கு சேவை செய்யவே” என அவர் தெரிவித்தார். கோவில் 11 அறங்காவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, சேகரிக்கப்படும் அனைத்துப் பணமும் கோவிலினூடாகவே நிருவகிக்கப்படுகிறது என அவர் மேலும் தெரிவித்தார். இதை நிரூபிக்கும் வகையில் அவர் ஒரு நிருபரை உள்ளே அழைத்து ஒரு கணக்குப் பதிவேட்டை திறந்து காண்பித்தார். எவ்வாறு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டு பதிவு செய்யப்படுகிறது என்பதை அவர் விளக்கினார். பின்னர் அவர் கோப்புகள் அடங்கிய பெட்டகத்தை திறந்து கனடிய வருமானவரி முகவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த கணக்காய்வு அறிக்கைகளையும் காண்பித்தார்.

கோவிலின் நிதிகள் யாவும் சுத்தமாக உள்ளன என அவர் சொன்னார்.

தவிரவும், ஸ்ரீலங்காவில் போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன. எல்.ரீ.ரீ.ஈ கிளர்ச்சியாளர்கள் வட பகுதிக் கடற்கரைகளில் வைத்து தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள். அதன் தலைவர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டார்கள். கிளாச்சியாளர்களுக்காக யாராவது பணம் சேகரித்தாலும் கூட அதை அவர்கள் எங்கு அனுப்புவார்கள்? என்று அவர் கேட்டார்.

மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

 நஷனல் போஸ்ட்


Share |

1 கருத்து:

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல