சனி, 12 டிசம்பர், 2015

2006இல் கடத்தப்பட்ட மகன் 2013இல் கொழும்பில் நின்றார் (இப்போ எங்கே என தந்தை கேள்வி)

இராணுவத்தினரால் 2006 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போன தனது மகனை 2013 ஆம் ஆண்டு கொழும்பு கொள்ளுப்பிட்டி யில் கண்டதாக தந்தை ஒருவர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நடை பெற்றது.



இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி தெற்கு சேர் பொன். இராமநாதன் வீதியை சேர்ந்த நாகலிங்கம் சத்தியவாகேஸ் வரன் எனும் பெயருடைய அந்த தந்தை மேலும் கூறுகையில்;,

கடந்த 2006ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் பத்தாம் திகதி நள்ளிரவு 12.15 மணியளவில் இராணுவத்தினரால் எனது மகனான சத்தியவாகேஸ்வரன் ரஜீவன் (கடத்தப்படும் போது வயது 32) கடத்தி செல்லப்பட்டார். இவ ருக்கு திருமணமாகி பதினைந்து நாட்கள் ஆன நிலையிலேயே கடத்தப்பட்டார்.

திருநெல்வேலியில் உள்ள எமது வீட்டிற்கு திருநெல்வேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ அதிகாரி சஞ்சீவ லியனகே (சியால்) என்பவர் பதினைந்து பேருடன் வெள்ளை மற்றும் கறுப்பு வானில் வந்து கடத்தி செல்ல முற்பட்டார். இதன் போது எனது மனைவியும் நானும் எமது பிள்ளை கடத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க மனைவியை தாக்கினர்.

இதன் பிறகு குரைத்து கொண்டிருந்த எமது வீட்டு நாயினையும் இராணுவம் தாக்கியது. இன்றும் அந்த நாய் நொண்டிக் கொண்டே நடக்கின்றது. பின்பு எமது மகனை வானில் இழுத்து சென்று கடத்தி சென்றனர். இவ்வாறு எமது மகன் கடத்தப்படும் போது ஏற்கெனவே அவர்கள் வந்த வானிற்குள் ஒரு இளைஞரின் அழுகுரல் சத்தம் கேட்டது.

எனது மகன் கடத்தப்பட்ட சமபவம் குறித்து மனிதவுரிமை ஆணைக்குழு மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டிருந்தேன். பின்பு 2007 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதியன்று எனது நண்பர் ஒருவரின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, அங்கு எனது மகனை கடத்திய இராணுவ அதிகாரி வந்திருந்தார். என்னை அங்கு கண்டதும் உடனடியாகவே அங்கிருந்து சென்றுவிட்டார்.

நான் அங்கிருந்து சென்ற பின்னர் வந்த இராணுவ அதிகாரி எனது மகன் உயிருடன் உள்ளதாக என் நண்பரிடம் தெரிவித்துள்ளார். இதனை எனது நண்பர் என்னிடம் நேரடியாகவே கூறியிருந்தார். பின்னர் 2013 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டியில் எனது மகன் ஈ.பி.டி.பியை சேர்ந்த டெனிஸ்வரன் என்பவருடன் நடந்து சென்ற போது நந்தகுமார் எனும் பெயருடைய எனக்கு தெரிந்தவர் கண்டுள்ளார்.

எனது மகன் காணாமல் போய் ஏழு வருடங்களின் பின்னர் கண்டதனை உடனடியாகவே பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரி வினருக்கு (வுஐனு) தெரியப்படுத்தியிருந்தேன். பின்னர் சென்ற வருடம் (2014) மார்ச் மாதம் நடுப்பகுதியில் எனது மகன் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் படித்தாரா? என்பது தொடர்பில் இரா ணுவத்தினர் சிலரால் விசாரணை செய்யப் பட்டுள்ளது.

இதே காலப்பகுதியில் யாழ்.மத்திய கல்லூரியிலும் எமக்கு அறிவிக்கப்படாமலேயே மகனின் க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேற்று அட்டையும் இராணுவத்தினரால் பெறப்பட்டுள்ளது. இதேபோல் எமது மகன் கடத்தப்படும் போது எமது பிரிவு கிராம சேவ கராக இருந்த கிராமசேவகரிடமிருந்தும் ரி.ஐ.டி.யினர் வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.

பின்பு 2014 ஆண்டு யூன் மாதம் 25 ஆம் திகதியன்று பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினை சேர்ந்த எஸ்.ஐ. பண்டார என் பவரிடமிருந்து தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்தது, அதில் எங்களது வீட்டில் வெடிபொருட்கள் உள்ளதாகவும், உங்களை கைது செய்யப்போவதாகவும் எம்மை மிரட்டினர்.
எனினும் நாம் எந்த மிரட்டலகளுக்கும் அஞ்சாது எமது கண்முன்னே கடத்தி செல்லப்பட்ட எனது மகனை தேடி அலைகின் றேன்.

காணாமல் போன எனது மகன் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் இருக்க முடியுமாயின் ஏன் தற்போது உயிருடன் இருக்க முடி யாது? எனது மகன் உயிருடன் தான் உள்ளார். என கண்ணீருடன் கூறுகின்றார் அந்த தந்தை. (எ-4)

வலம்புரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல